தனியார் நிதி நிறுவனம் கடன் தவணை நெருக்கடி : மன உளைச்சலால் விவசாயி தற்கொலை

தற்கொலை செய்துகொண்ட விவசாயி

பணம் இருந்தால் தவணை செலுத்தியிருப்போம். இல்லாத நிலையில் தொந்தரவு செய்தனர் என்கின்றனர் உறவினர்கள்.

  • Share this:
தனியார் நிதி நிறுவனத்தில் விவசாயத்திற்கு வாங்கிய கடனுக்கான மாத தவணை ரூ. 6 ஆயிரத்தை கட்ட முடியாத நிலையில், தவணையை வசூலிக்க வங்கி ஊழியர்கள் வீட்டிலேயே அமர்ந்திருந்ததால், 75 வயதான விவசாயி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் குழுமணி அருகே பேரூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மருதமுத்து (75). வாழை விவசாயி. இவர், திருச்சி மாநகரம் உறையூரில் உள்ள  ஈக்விடாஸ் என்கிற தனியார் நுண் நிதி நிறுவனத்தில் வாழை விவசாயத்திற்காக,  கடந்த 2017ம் ஆண்டு  1.5 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதில்,  கடைசி 2 மாதத்திற்கான தவணைத் தொகை ரூ.12 ஆயிரத்தை  செலுத்த முடியவில்லை.

அதே நிதி நிறுவனத்தில் மேலும் ஒரு லட்சம் ரூபாய்  மீண்டும் கடன் பெற்றுள்ளார். கொரோனா பொருளாதார இழப்பு, மகசூல் குறைவு உள்ளிட்ட காரணங்களால்,  இந்த மாதம் செலுத்த வேண்டிய தவணைத் தொகை ரூபாய் 6,000 செலுத்த முடியவில்லை.
கடந்த இரண்டு நாட்களாக  நிதி நிறுவனத்தில் இருந்து கடன் தவணையை வசூலிக்க ஊழியர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். அடுத்த மாதம் கட்டி விடுகிறோம் என்று சொல்லி அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலையும் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் மீண்டும் கடன் தவணையை  வசூல் செய்ய வந்துள்ளனர். விவசாயி மருதமுத்து மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மனைவி, மகன் உள்ளிட்டோர் வேலைக்கு சென்று விட்டனர். நிதிநிறுவன  ஊழியர்கள்,  கடன் தொகையை வசூலிக்காமல் வீட்டை விட்டு செல்லமாட்டேன் என்று கூறி வீட்டிலேயே அமர்ந்துள்ளனர்.

வெகுநேரமாகியும் அவர் செல்லாத நிலையில் மன உளைச்சல் அடைந்த விவசாயி மருதமுத்து  வீட்டிற்குள் சென்று, கதவை சாத்திக் கொண்டுள்ளார்.  வெகு நேரமாகியும் கதவு திறக்கவில்லை என்பதால் அக்கம்பத்து வீட்டார்கள் கதவை திறந்துளள்ளனர். அப்போது வீட்டிற்குள் சேலையால் தூக்கு மாட்டி மருதமுத்து இறந்து நிலையில் தொங்கியுள்ளார்.

உயிரிழந்த விவசாயியின் மனைவி


Must Read : மேகதாது அணை குறித்து ஆலோசிக்க முடியாது, 30 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் - காவிரி மேலாண்மை ஆணையம்

இது குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் காவல் நிலைய  போலீசார் சடலத்தை, அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.விவசாயின் தற்கொலை குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பணம் இருந்தால் தவணை செலுத்தியிருப்போம். இல்லாத நிலையில் தொந்தரவு செய்தனர். ஏற்கனவே உடல் நலக்குறைவால் இருந்தவர்,  மன உளைச்சல் தாங்காமல் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டுவிட்டார் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Published by:Suresh V
First published: