ஒரு மாத தவணை கட்டாததால் டிராக்டர் பறிமுதல்: விரக்தியில் விவசாயி தற்கொலை முயற்சி
ஒரு மாத தவணை கட்டாததால் டிராக்டர் பறிமுதல்: விரக்தியில் விவசாயி தற்கொலை முயற்சி
தற்கொலைக்கு முயன் விவசாயி
வங்கி கடனுக்கான தவணை செலுத்துவதில் சலுகை அளிக்கப்படும் என அரசு தெரிவித்த நிலையில், ஒரு மாத தவணை கட்டாததாக கூறி டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம், வடமழை கிராமத்தைச் சேர்ந்த செந்தில்நாதன் என்பவர், சோழமண்டலம் நிதி நிறுவனத்தில் கடன்பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார்.
ஆனால், ஒரு மாதம் மட்டுமே கடன் தவணையை கட்டாமல் இருந்த நிலையில், டிராக்டரை இவரிடம் இருந்து நிதிநிறுவன ஊழியர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான செந்தில்நாதன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து மயக்க நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கஜா புயலால் வேதாரண்யம் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் தங்களின் உடைமைகளை இழந்து நிர்க்கதியாகினர். வாழ்வாதாரத்தையே இழந்துள்ள நிலையில், வங்கி கடனுக்கான தவணை செலுத்துவதில் சலுகை அளிக்கப்படும் என அரசு தெரிவித்தது.
ஆனால், ஒரு மாத தவணை கட்டாததாக கூறி, டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Also see... கோவையில் கொம்பன்...! ஜேசிபி இயந்திரத்தை ஜேசிபி வாகனத்தை முரட்டுத்தனமாக தாக்கௌம் காட்டு யானை!
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.