கொரோனா எதிரொலியால் கொல்லையிலேயே பழுத்து வீணாகும் வாழைத்தார்கள்!

500 முதல் 600 ரூபாய்க்கு விற்கக்கூடிய வாழைத்தார்கள் 100 ரூபாய்க்கு கூட விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனையாக தெரிவித்தனர்.

500 முதல் 600 ரூபாய்க்கு விற்கக்கூடிய வாழைத்தார்கள் 100 ரூபாய்க்கு கூட விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனையாக தெரிவித்தனர்.

  • Share this:
    கொரோனா நோய் எதிரொலியால், கரூர் மாவட்டத்தில் சுமார் 80,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட வாழை. வாழைத்தார்களை வியாபாரிகள் வாங்க வராததால்  கொல்லையிலே பழம் பழுத்து வீணாகிறது. 500 முதல் 600 ரூபாய்க்கு விற்கக்கூடிய வாழைத்தார்கள் 100 ரூபாய்க்கு கூட விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனையாக தெரிவித்தனர்.

    கரூர் விவசாயம் சார்ந்த மாவட்டம், இதில் கிருஷ்ணராயபுரம், வேலாயுதம்பாளையம், வாங்கல், திருக்காம்புலியூர், லாலாபேட்டை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, குளித்தலை, நச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 80,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை விவசாயம் செய்து வருகின்றனர்.

    காவிரி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள இந்த பகுதிகளில் பாசன வாய்க்கால் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு பூவம் பழம், கற்பூரம், ரஸ்தாளி, ஏல அரிசி, பச்ச நாடன் உள்ளிட்ட வாழை ரகங்கள் பயிரிடப்படுகிறது. இந்த விவசாயத்தை நம்பி சிறு மற்றும் குறு விவசாயிகள், அதனை சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 50,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்து வருகின்றனர்.

    கடந்த வைகாசி மாதம் நடவு செய்யப்பட்டு தற்போது அறுவடைக்கு வாழை தார்கள் தயாராக உள்ளது. இங்கு விளையக்கூடிய வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம்.

    இந்நிலையில் கொரனோ வைரஸ் நோய் பரவாமல் தடுக்க அரசு சார்பில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டதையடுத்து, அறுவடைக்கு ஆள் கிடைக்காததாலும், வியாபாரிகள் வாழைத் தார்களை வெட்ட வராததாலும், வாழை கொள்ளையிலேயே பழுத்து கொட்ட ஆரம்பித்துவிட்டன.

    மேலும் மயில், குருவி, அணில் கூட்டம் கூட்டமாக வந்து பழங்களை தின்று வருகிறது. தற்போது விவசாய விளைப் பொருட்களை எடுத்துச் செல்ல அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், 4 தினங்களுக்கு முன்பாகவே வியாபாரிகள் வந்து வெட்டி சென்று இருந்தால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு இருக்காது.

    அந்த நேரத்தில் வெட்டாத்தால் 500 ரூபாய் முதல் 600 ரூபாய்க்கு போகக்கூடிய வாழைத்தார்கள் தற்போது 100 ரூபாய்க்கு கூட வாங்க வியாபாரிகள் வரவில்லை. ஆகையால் வாழை தார்கள் வீணாகி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஒரு ஏக்கருக்கு சுமார் இரண்டரை லட்சம் வரை செலவு செய்து ஒரு ரூபாய் கூட பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை நம்பி பல லட்சம் கடன் வாங்கி விவசாயம் செய்து அறுவடை நேரத்தில் கொரோனா வைரஸ் நடவடிக்கையால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Also see...





    இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Published by:Vaijayanthi S
    First published: