Home /News /tamil-nadu /

ஏப்.1 முதல் இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு

ஏப்.1 முதல் இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு

சுங்கச் சாவடி

சுங்கச் சாவடி

தமிழ்நாடு அரசு சார்பில் சுங்கச்சாவடிகளை அகற்ற கோரிக்கை விடுத்த நிலையில், அதே சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சென்னை புறநகர் பகுதிகளில் வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசின் நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தமிழ்நாடு அரசு சார்பில் சுங்கச்சாவடிகளை அகற்ற கோரிக்கை விடுத்த நிலையில், அதே சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மாநில எல்லைக்குள் உள்ள பரனூர், சூரப்பட்டு, சென்னை சமுத்திரம், நெமிலி, வானகரம் ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்றுமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், மாநில அரசு விடுத்திருந்த கோரிக்கை பட்டியலில் உள்ள சூரப்பட்டு மற்றும் வானகரம் ஆகிய இரண்டு சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகரித்து மத்திய அரசின் நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Also Read : தண்ணீர் கேட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவர் போக்சோவில் கைது

    வானகரம் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வரக்கூடிய கார், ஜீப், வேன்களுக்கு ரூ.45 ஆக இருந்த கட்டணம் ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ஒரே நாளில் திரும்பி வரும் பயணக்கட்டணம் ரூ.65 லிருந்து ரூ.75 ஆக உயர்த்தி நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சூரப்பட்டு சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வரக்கூடிய கார், ஜீப், வேன்களுக்கு ரூ. 60 ஆக இருந்த கட்டணம் ரூ.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஒரே நாளில் திரும்பி வரும் பயணக்கட்டணம் ரூ.90 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தி நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Toll Plaza

    அடுத்த செய்தி