ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! பேன்சி நம்பர் வாங்க இனி ரூ.8 லட்சம் வரை செலவாகும்! புதிய மாற்றம்!

வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! பேன்சி நம்பர் வாங்க இனி ரூ.8 லட்சம் வரை செலவாகும்! புதிய மாற்றம்!

மாதிரி படம்

மாதிரி படம்

இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மற்றும் பிற வாகனங்களுக்கான பேன்சி எண்களை முன்பதிவு செய்வதற்கான கட்டணம் 20 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  போக்குவரத்து துறையில் பேன்சி எண்களுக்கான புதிய கட்டண தொகை குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வாகனங்களுக்கு பேன்சி எண் பெறுவதற்கு 8 லட்ச ரூபாய் வரை கட்டணம் செலுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  வாகன உரிமையாளர்கள் பேன்சி எண்களைப் பெறவதற்கான கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் முதல் 2 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பேன்சி எண் கேட்டு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி, பேன்சி எண்களை பெறுவதற்கான கட்டணங்களை உயர்த்த போக்குவரத்து துறை முன்மொழிந்தது.

  இந்நிலையில், மாற்றியமைக்கப்பட்ட புதிய கட்டணம் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான பேன்சி எண்களை முன்பதிவு செய்ய இரண்டாயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: காதலியை பெண் கேட்டதால் பெண்ணின் தந்தை தாக்குதல்... சோகத்தில் இளைஞர் தற்கொலை - திருவண்ணாமலையில் பரபரப்பு

  இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மற்றும் பிற வாகனங்களுக்கான பேன்சி எண்களை முன்பதிவு செய்வதற்கான கட்டணம் 20 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியம் பூஜ்ஜியம் பூஜ்ஜியம் ஒன்று முதல் 9999 ஒன்பது ஒன்பது ஒன்பது ஒன்பது வரையிலான சிறப்பு பேன்சி எண்களை, 80 ஆயிரம் ரூபாய் முதல் 8 லட்ச ரூபாய் வரை செலுத்தி முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Tamilnadu government