தலைவர் அரசியலுக்கு வர வேண்டும் : ரஜினியின் வீடு முன் ரசிகர்கள் தர்ணா

Youtube Video

ரசிகர்களும், தமிழக மக்களும் தன்னுடைய முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ரஜினிகாந்த் அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டார்

  • Share this:
    ஜினி அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி அவரது ரசிகர்கள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்த்திருந்தநிலையில், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார்.

    மேலும், தடுப்பூசி வந்தால் கூட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை சாப்பிடுவதால், இந்த கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரசாரத்தின் போது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் தன்னை நம்பி தன் கூட வந்து அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும், சங்கடங்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.

    ” என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேம். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

    ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். மன்னியுங்கள்.” என்று தெளிவாக அறிக்கை வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும் என்றும், தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு தன்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.


     

    படிக்க: ரஜினிகாந்த் அறிக்கை

    மேலும், ரசிகர்களும், தமிழக மக்களும் தன்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ரஜினிகாந்த் அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டார். ஆனால், சில ரசிகர்கள், அவரது வீடு முன் அமர்ந்துகொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 


    முதலில் 5 பேர் மட்டுமே தொடங்கிய போராட்டம் பின்னர் படிப்படியாக ரசிகர்கள் வருகை அதிகரித்து 20க்கும் மேற்பட்டோர் இல்லத்தின் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    நீங்கள் கட்சியை மட்டும் தொடங்கினால் போதும் உங்களுக்காக நாங்கள் பிரச்சாரம் செய்து உங்களை ஜெயிக்க வைப்போம் என்று கோஷம் எழுப்பினர்.

    போயஸ் கார்டன் இல்லம் இருக்கும் பகுதி, குடியிருப்பு பகுதி என்பதால் போலீசார் உடனடியாக போராட்டம் நடத்தியவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு கூட்டம் கலைக்கப்பட்டது.
    Published by:Yuvaraj V
    First published: