• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • ரஜினியும் கமலும் இணைந்தால் ரசிகர்கள் படம் பார்க்க மட்டும் கூடுவார்கள்- கடம்பூர் ராஜூ

ரஜினியும் கமலும் இணைந்தால் ரசிகர்கள் படம் பார்க்க மட்டும் கூடுவார்கள்- கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக இருந்தாலும் அரசியல் ரீதியாக பார்த்தால் அதிமுகவிற்கு மட்டுமே அவர் சொந்தம்

 • Share this:
  நடிகர் ரஜினியும் கமல்ஹாசனும் ஒன்றாக இணைந்தால் ரசிகர்கள் படம் பார்க்க மட்டும்தான் கூடுவார்கள் என்றும், இதனால் ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கை வேண்டுமானால் அதிகமாகலாம் மக்கள் விரும்பினால் மட்டும்தான் அரசியலில் வெற்றி பெற முடியும் எனவும் தூத்துக்குடியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்ச கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

  தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 100 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட கிடங்கு திறப்பு விழா  நடைபெற்றது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சேமிப்பு கிடங்கு கல்வெட்டை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றினார். 100 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட இந்த சேமிப்பு கிட்டங்கியில் உழவர்கள் தாங்கள் பயிர் செய்த, விளை பொருட்களை இருப்பு வைப்பதற்கு பேருதவியாக இருக்கும் என கருதப்படுகின்றது.

  நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கடம்பூர் ராஜூ,  நடிகர் ரஜினியும் கமல்ஹாசனும் ஒன்றாக இணைந்தால் அதிமுகவிற்கு பாதிப்பு ஏற்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ரசிகர்கள் படம் பார்க்க மட்டும்தான் கூடுவார்கள், இதனால் ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கை வேண்டுமானால் அதிகமாகலாம் மக்கள் விரும்பினால் மட்டும்தான் அரசியலில் வெற்றி பெற முடியும் என்றார். கமலைப் பொறுத்தவரை அரசியல் தெரியாமல் ஏதோ பேசுகிறார்.

  அதிமுக ஆரம்பித்து 49 ஆண்டுகளில் பத்து பொதுத்தேர்தலை சந்தித்து அவற்றில் 7ல் வெற்றி கண்டுள்ளது. 3 முறை தான் திமுக வென்றுள்ளது. அதிலும் ஒரு முறை இரட்டை இலை சின்னத்தை இழந்து  இரண்டு பிரிவுகளாக நின்றதனால் திமுக வெற்றி பெற்றது. 1996-ல் அவர்களது குடும்ப தொலைக்காட்சி மூலம் தவறான தகவல்களை பரப்பி திமுக வெற்றி பெற்றது. 2006 தேர்தலில் மைனாரிட்டியாக காங்கிரஸ் ஆதரவோடு வெற்றி பெற்றது. 49 ஆண்டுகால வரலாற்றில் 37 ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சியில் இருக்கின்ற கட்சி அதிமுகதான் என்றார்.

  2021 மூன்றாவது அணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, 3 வது அணி அல்ல, 4வது அணியல்ல, 5வது அணி அமைத்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும் என்றார். இதேபோன்று கடந்த காலத்தில் மூன்றாவது அணி அமைத்து போட்டியிட்டது. 234 தொகுதிகளில் இரட்டைஇலை சின்னத்தில் அதிமுக தன்னந்தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்றது என்றார். 2021 சட்டமன்றத் தேர்தலில் எத்தனை அணி அமைந்தாலும் அதிமுக வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சி தொடரும் என டம்பூர் ராஜூ கூறினார்.

  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சி அமைப்பேன் என, கமல்ஹாசன் கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக இருந்தாலும் அரசியல் ரீதியாக பார்த்தால் அதிமுகவிற்கு மட்டுமே அவர் சொந்தம் அதிமுக அவர் உருவாக்கிய இயக்கம் அந்த புகழும் பெருமையும் அதிமுகவிற்குதான் வலுசேர்க்கும் மற்றவர்களுக்கு வலு சேர்க்காது என்றார்.

  சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணியினர் நடத்தும் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், தேர்தல் நேரத்தில் போராட்டம் நடத்தி மக்களை திசை திருப்புவதற்கு திமுக முயல்வதாக அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம் சாட்டினார். பெட்ரோல், கேஸ் விலை உயர்வுக்கு சரியான குரல் கொடுக்கின்ற இயக்கமாக அதிமுக அரசு உள்ளது என்றும் இதற்கு அரசு மூல

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: