அரசியலுக்கு வர வலியுறுத்தி ரஜினிகாந்த் இல்லத்திற்கு அஞ்சல் அட்டை அனுப்பும் ரசிகர்கள்

அரசியலுக்கு வர வலியுறுத்தி ரஜினிகாந்த் இல்லத்திற்கு அஞ்சல் அட்டை அனுப்பும் ரசிகர்கள்

அரசியலுக்கு வர வலியுறுத்தி ரஜினிகாந்த் இல்லத்திற்கு அஞ்சலட்டை அனுப்பும் ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி அவர் இல்லத்திற்கு ரசிகர்கள் அஞ்சல் அட்டை அனுப்பிவருகின்றனர்.

  • Share this:
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து தன் உறுதியான முடிவை அறிவிக்கவில்லை என்றாலும் ரஜினி நற்பணி மன்றம் சார்பில் ரஜினி மக்கள் மன்ற கூட்டங்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் குழப்பத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் அவரின் ரசிகர்களும் ரஜினிகாந்த் இந்த ஆண்டு நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டுமென தங்களின் ஆவலை போஸ்டர் ஒட்டி வெளிப்படுத்தி வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக, புதுவிதமான முறையில் ரஜினிக்கு அழுத்தம் கொடுக்க, ரசிகர்கள் தம் கருத்தை அஞ்சல் அட்டை மூலம் ரஜினிக்கு அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், பல பகுதியிலிருந்தும் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்திற்குக் கடிதம் அனுப்பப்பட்டு வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மட்டுமே தமிழகத்தில் மாற்றம் இருக்கும் என்றும் அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
Published by:Rizwan
First published: