பிரபல ரவுடி ரிஸ்க் பாஸ்கருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு; உயிர் ஊசல்!

ரவுடி ரிஸ்க் பாஸ்கர்

ஜெகன் உள்ளிட்டோர் ரிஸ்க் பாஸ்கரன் உடன் நீ பெரியவனா நான் பெரியவனா வாய்த்தகராறு ஈடுபட்டபோது சரமாரியாக பாஸ்கரை தலை, கழுத்து, உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி உள்ளனர் என தெரியவந்தது.

  • Share this:
    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி, பாலிஸ்வரன் கண்டிகை பகுதியில் இன்று அதிகாலை வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின்பேரில் விரைந்து சென்ற சிப்காட் போலீசார் அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

    இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தியதில் வெட்டப்பட்ட நபர் பாலீஸ்வரன் கண்டிகையைச் சேர்ந்த பார்த்தசாரதி (எ) ரிஸ்க் பார்த்தசாரதி என தெரியவந்தது. இவர் எற்கனவே பல கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர், மேலும் இரண்டு முறை குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டவர்.

    Also Read:   பூமியின் அழிவு எப்போது?: சரியாக கணித்த ஆராய்ச்சியாளர்கள்!

    தொடர்ந்து விசாரணையில் கும்மிடிப்பூண்டி பஜார் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஜெகன்(27), கார்த்திக் (28) சிந்தலகுப்பம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (31) மற்றும் வெட்டுப்பட்ட பார்த்தசாரதி உடன் நான்கு பேர் நேற்று இரவு முதல் விடிய விடிய மது அருந்தி உள்ளனர். இதில் ஜெகன் உள்ளிட்டோர் ரிஸ்க் பார்த்தசாரதி உடன் நீ பெரியவனா நான் பெரியவனா வாய்த்தகராறு ஈடுபட்டபோது சரமாரியாக பாஸ்கரை தலை, கழுத்து, உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி உள்ளனர் என தெரியவந்தது.

    ரவுடி ஜெகன்


    Also Read: 75 நாட்கள் பிணவறையில் வைக்கப்பட்ட கணவரின் சடலம்! - மனைவி பகீர்

    இதைத்தொடர்ந்து சிப்காட் போலீசார் அதிரடியாக ஜெகன், கார்த்திக், பிரேம்குமார், ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் விசாரணையில் மேலும் சில நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    கைது செய்யப்பட்ட ஜெகன் ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடையவர் என தெரியவந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பின்னர் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

    திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் ஆர்.எல்.பார்த்தசாரதி
    Published by:Arun
    First published: