ராணிப்பேட்டையில் பிரபல ரவுடி பிளேடு நித்யாநந்தன் கழுத்து அறுத்து கொலை

Youtube Video

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரபல ரவுடி பிளேடு நித்யானந்தன் அரிவாளால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையின் பின்னணி என்ன?

 • Share this:
  தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் பிளேடாலேயே கழுத்தை அறுத்த பிரபல ரவுடி பிளேடு நித்யா, அரிவாளால் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். டாஸ்மாக் பாரில் மதுபோதையில் நடந்த சண்டை கொலையில் முடிந்தது எப்படி?

  ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாணாவரம் ரங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான நித்தியானந்தன். சிறுவயதில் இருந்தே குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இவர் கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கி பிரபலமானார். இவர் மீது திருத்தணி, அரக்கோணம், பாணாவரம், ஆர்.கே.பேட்டை, தக்கோலம், சோளிங்கர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

  சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நித்தியானந்தன் சிறையில் இருந்து வந்த பிறகும் குற்றச்சம்பவங்களை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், புதன்கிழமை மாலை 5 மணியளவில் இருசக்கர வாகனத்தில் பாணாவரம் அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக நித்தியானந்தன் சென்றுள்ளார். அப்போது எதிரே காரில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் நித்தியானந்தன் வாகனத்தின் மீது மோதி அவரை நிலை குலையச் செய்துள்ளது.

  கீழே விழுந்த நித்யானந்தனை கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்ட தொடங்கியுள்ளது அந்த மர்ம கும்பல். அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிய நித்தியானந்தனை துரத்திய கும்பல், அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டுத் தப்பியோடி விட்டது.

  மேலும் படிக்க... வடிவேல் சொல்வதை போல கிணத்தை காணவில்லை என பல புகார்கள் வருகின்றன... இனி கவலை வேண்டாம்... - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

  சம்பவ இடத்திற்கு வந்த பாணாவரம் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணையை தொடங்கினர். அதில், 33 வயதான நிஷாந்த், 32 வயதான வினோத்குமார், 21 வயதான பிரதீப், 26 வயதான சேட்டு ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர் சில நாட்களுக்கு முன்பு பிளேடு நித்யா, அங்குள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தார். அருகே அமர்ந்து அருந்திக் கொண்டிருந்த 33 வயதான நிஷாந்த் உடன் மதுபோதையில் சண்டையிட்டுள்ளார்.

  அந்தத் தகராறு வாக்குவாதமாக மாறி அடிதடியில் முடிந்தது. அதற்குப் பழி தீர்க்கும் விதத்தில், நிஷாந்த், தனது நண்பர்களுடன் சேர்ந்து நித்யானந்தனை படுகொலை செய்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரபல ரவுடியாக வலம் வந்தவர் சாலையில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: