• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பிரபல நடிகர் & தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் பாஜகவில் இணைந்தார்

பிரபல நடிகர் & தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் பாஜகவில் இணைந்தார்

 பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த நடிகர் பிரமிட் நடராஜன்

பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த நடிகர் பிரமிட் நடராஜன்

பிரபல சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான பிரமிட் நடராஜன் தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

  • Share this:
தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை, உதயா, சமுத்திரம், அலைபாயுதே உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவரும், உதயா, பிஸ்தா, ரிதம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவருமான பிரபல தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

Also read... பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே.வேதரத்தினம்

அதன்பிறகு பேசிய பிரமிட் நடராஜன், பாஜகவில் இணைந்ததில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைவதாகவும், அதர்மம் எப்போதெல்லாம் தலை தூக்குகிறதோ அப்போது தர்மம் கடவுள் ரூபத்தில் தலைகாக்கும் , இப்போது அந்த கடவுள் மோடி ரூபத்தில் அதர்மத்தை அழிக்க வந்திருக்கிறார்.

Also read... நடிகை வனிதாவிற்கு கொலை மிரட்டல் - சூர்யா தேவி கைது

எனக்கு இருக்கின்ற நல்ல பெயர் , தொடர்புகளை பாஜகவிற்காக பயன்படுத்துவேன். ராமராக இருக்கக்கூடிய பிரதமர் மோடிக்கு ஒரு அணிலாக என்னால் இயன்ற பணியை செய்வேன் என தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: