நியூஸ்18 செய்தி எதிரொலி: ஏழு மணி நேரத்தில் இந்தியத் தூதரகம் நடவடிக்கை! குடும்பத்தார் மகிழ்ச்சி

  • News18
  • Last Updated: December 4, 2019, 7:53 PM IST
  • Share this:
நவம்பர் 14-ம் தேதியிலிருந்து தன்னுடைய கணவரின் மொபைல் போன் சுவிட்ச் ஆப்பில் இருந்ததாகவும், தற்போது அவர் குறித்த தகவல் கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் குவைத்தில் பாஸ்போர்ட் இன்றி தவித்த கருப்பசாமியின் மனைவி முத்துமாரி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எஸ்.டி. சேதுராஜபுரம் என்னும் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி, கடந்த 2014-ம் ஆண்டு குவைத்திற்கு ஓட்டுனர் பணிக்காக சென்றிருக்கிறார். தொடர்ந்து தொடர்பில் இருந்த அவர் கடந்த மாதம் கடைசியாக விட்டிற்கு தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது தனது பாஸ்போர்ட் காணாமல் போய்விட்டதாகவும், தன்னுடைய முதலாளி தகராறு செய்வதாகவும் கூறியிருக்கிறார்.

பாஸ்போர்ட்டை இந்திய தூதரகத்தில் புதுப்பித்துவிட்டு விரைவில் வீடு திரும்ப உள்ளதாகவும் கூறியிருக்கிறார். அதன் பிறகு அவரை குடும்பத்தாரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் கருப்பசாமியை உடனடியாக அரசு மீட்டுத்தர வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து புகார் அளித்தனர்.


இதுகுறித்து நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி மற்றும் இணையதளத்தில் செய்திகள் வெளியானது. மேலும், இணையதளத்தில் பதிவிடப்பட்ட செய்தியை, குவைத் நாட்டுக்கான இந்தியத் தூதரக ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்யப்பட்டது. அதற்கு உடனடியாக பதிலளித்த இந்தியத் தூதரகம், ‘கருப்பசாமியை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் அவருடைய நிலை குறித்து குவைத் அதிகாரிகளிடம் பேசிவிட்டதாகவும், விரைவில் கருப்பசாமி நாடு திரும்புவார்’ என்று குறிப்பிட்டது.

கருப்பசாமி குறித்து தகவல் கிடைத்த நிலையில், இதுகுறித்து நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கருப்பசாமியின் மனைவி முத்துமாரி, ‘ அவரை மீட்பதற்கு ஆட்சியரிடம் முறையிட்டோம். இந்தியத் தூதரகத்துக்கு மெயில் மூலம் புகார் அளித்தோம். அவர்களது நண்பர்கள் எல்லோரிடமும் விசாரித்தோம். யாருக்கும் அவர் குறித்து தெரியாமல் இருந்தது. என் மகன் பெயர் நிதிஷ் குமார்.

என் மகனிடம் அவர் எப்போதும் தொடர்ச்சியாக போனில் பேசுவார். கடந்த நவம்பர் 14-ம் தேதியிலிருந்து அவருடைய போன் சுவிட்ச் ஆப்பில் இருந்துவருகிறது. தற்போதுதான் அவருடைய நிலை குறித்து தெரிந்தது. என்னுடைய கணவர் குறித்து அவருடைய பெரியம்மா மகன் தெரிவித்தார்.’ என்று தெரிவித்தார்.Also see:

First published: December 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading