Home /News /tamil-nadu /

மகளின் ஆபாசப் புகைப்படத்தை காட்டி, தாயிடம் 2.50 லட்சம் அமெரிக்க டாலர் கேட்டு மிரட்டிய குடும்ப நண்பன்!

மகளின் ஆபாசப் புகைப்படத்தை காட்டி, தாயிடம் 2.50 லட்சம் அமெரிக்க டாலர் கேட்டு மிரட்டிய குடும்ப நண்பன்!

அமெரிக்காவில் படித்த இளம் பெண்ணின் ஆபாசப் புகைப்படங்களை காட்டி, தாயிடம் 2.50 லட்சம் அமெரிக்க டாலர் கேட்டு குடும்ப நண்பனே மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் படித்த இளம் பெண்ணின் ஆபாசப் புகைப்படங்களை காட்டி, தாயிடம் 2.50 லட்சம் அமெரிக்க டாலர் கேட்டு குடும்ப நண்பனே மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் படித்த இளம் பெண்ணின் ஆபாசப் புகைப்படங்களை காட்டி, தாயிடம் 2.50 லட்சம் அமெரிக்க டாலர் கேட்டு குடும்ப நண்பனே மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
சென்னை, மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரியின் மகள் ஒருவர் அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் மர்ம நபர் ஒருவர் அந்த அதிகாரியின் வாட்ஸ் அப்பில் அவரது 26 வயது மகளின் ஆபாச புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார். உடனடியாக 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 1.87 கோடி) பணம் தரவேண்டும் எனவும் இல்லை என்றால் புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு அதைவிட அதிகமாக சம்பாதித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து அந்த அதிகாரி அளித்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் அந்த நபர் போரூர் லட்சுமி நகர் இரண்டாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ரமேஷ் (51) என்பது தெரியவந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ரமேஷ் என்பவர் அமெரிக்காவில் மென்பொறியாளாராக வேலை பார்த்து வருகிறார் என்பதும் கடந்த சில ஆண்டுகளாக தனது குடும்பத்தோடு ரமேஷ் அமெரிக்காவில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும், ரமேஷின் குடும்பமும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பமும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப நண்பர்களாக இருந்து வருகிறார்கள் என்பதும் தெரியவந்தது.
ரமேஷின் மனைவியும் இளம்பெண்ணின் தாயாரும் கல்லூரி நண்பர்கள் என்பதும் அதன் மூலமாக குடும்ப நண்பர்களாக ஆகியுள்ளனர் என்பதும் தெரியவந்தது.

கடந்த 2019 ம் ஆண்டு அரசு அதிகாரியின் மகளான அந்த இளம்பெண் Urban planning என்ற படிப்பு படிப்பதற்கு அமெரிக்கா  சென்றுள்ளார் என்பதும் அங்கு குடும்ப நண்பர்களான ரமேஷின் வீடு உள்ள பகுதியான சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே இளம்பெண் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு அங்குள்ள மனநல காப்பகத்தில் 12 நாட்கள் தங்கி சிகிச்சைப்பெற்று வந்துள்ளார். அப்போது இளம்பெண்ணின் குடும்ப நண்பர்களான ரமேஷ் மற்றும் ரமேஷின் குடும்ப உறுப்பினர்கள் இளம்பெண்ணை கவனித்து வந்துள்ளார்கள் என்பதும் தெரியவந்தது.

அந்த சமயங்களில் இளம்பெண் சாப்பிடுவது, குளிப்பது போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு அவருக்கு உதவி தேவைப்பட்டது. அதை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட ரமேஷ் தனது குடும்பத்தார்கள் இல்லாதபோது இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து வைத்துக்கொண்டதும் தெரியவந்தது.

பின்பு சிகிச்சை முடித்து இளம்பெண்ணை சென்னை அழைத்து அவரது தாயிடம் ஒப்படைத்தனர். தற்போது நலமுடன் இருக்கும் இளம்பெண்ணுக்கு திருமணம் முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதால் இதனை சாதகமாக்கி 25 ஆண்டுகளுக்கும் மேலாக பழகி வந்த நண்பர் குடும்பத்திடமே பணம் கறக்க முடிவு செய்துள்ளார் ரமேஷ். இதனால் தனது கல்லூரி படிக்கும் மகனை தனது உறவினர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதாக பொய்க்கூறி தனது மகனோடு அமெரிக்காவிலிருந்து சென்னை வந்துள்ளார் ரமேஷ் என்பதும் தெரியவந்ததுள்ளது.

இதனைதொடர்ந்து தான் 2019ம் ஆண்டு தான் எடுத்த புகைப்படங்களை தற்போது அவருக்கு தாயாருக்கு அனுப்பி 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும் பணம் தராவிடில் இணையதளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து அதை விட அதிக பணம் சம்பாதித்து விடுவதாவும் மிரட்டியுள்ளார் என்பது தெரிய வந்தது.

குறிப்பாக இப்படி ஒரு மிரட்டல் வந்ததும் இளம்பெண்ணின் தாயார் தனது குடும்ப நண்பரான தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் இதே ரமேஷிடம் தனக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்துள்ளது என்ன செய்வதென்று தெரியவில்லை என கதறி அழுத்துள்ளார். மேலும், அதற்கு ரமேஷ் நம்முடைய பெண்னை வைத்து மிரட்டும் நபரை நான் கண்டறிந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறேன் என்று கூறியுள்ளார் எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

குறிப்பாக இளம்பெண் அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற போது அங்கு சுமார் 20 லட்சத்திற்கும் மேல் ரமேஷ் அவருக்கு செலவு செய்துள்ளார் என்பதும் அதனை தற்போதுவரை இளம்பெண்ணின் தாய் திருப்பியளிக்கவில்லை எனவும் ரமேஷ் விசாரணையில் கூறியுள்ளது குறிப்பிடத்தகத்து.

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் மிரட்டுதல், பெண்ணின் நாகரிகத்தை அவமதிக்கும் செயல் செய்தல், பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுவது  உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட ரமேஷை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
Published by:Esakki Raja
First published:

Tags: Threatening

அடுத்த செய்தி