சென்னை அம்பத்தூரில் கணவரின் சித்ரவதை தாங்க முடியாமல் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அம்பத்தூர், கள்ளிக்குப்பம், சக்தி நகர், முதல் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (33). இவர் ஆவடி அருகே காட்டூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வித்யாகுமாரி (27). இவர்களுக்கு திருமணமாகி 5ஆண்டுகள் ஆகிறது.தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளன.
வித்யாகுமாரிக்கு திருமணத்தின்போது பெற்றோர் 13 சவரன் தங்க நகைகளும், பைக் வாங்குவதற்கு ரூ.65 ஆயிரம் பணமும் மற்றும் சீர்வரிசை பொருட்களும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
இதற்கிடையில், மூர்த்தி தனது மனைவி வித்யாகுமாரியிடம் பெற்றோரிடம் சென்று பணம் வாங்கி வருமாறு அடிக்கடி தகராறு செய்துள்ளாரார். மேலும், அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர், மூர்த்தி வீட்டில் இருந்து வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு, வித்யாகுமாரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது குறித்து வித்யாகுமாரின் தாய் மீனாட்சி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், எனது மகள் வித்யாகுமாரியிடம் கணவர் மூர்த்தி பணம் கேட்டு அடித்து உதைத்துள்ளார்.இதன் காரணமாக, அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்புக்கு காரணமான கணவர் மூர்த்தி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் புகாரில் கூறியுள்ளார். அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கனகராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வித்யாகுமாரிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக ஆவதால், அம்பத்தூர் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர் செய்தியாளர்: கன்னியப்பன்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Commit suicide, Crime | குற்றச் செய்திகள், Family fight, Husband Wife, Money problem