வேலூர் மாவட்டம், ஆம்பூர் ரயில் நிலையத்தில், தண்டவாளத்தைக் கடந்த முயன்ற சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆம்பூர் அடுத்த கரும்பூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சங்கர், அவரது சகோதரி பானுமதி, அவரின் 11 வயது பேரன் நித்தீஷ் ஆகிய 3 பேர் இன்று காலை சென்னை செல்வதற்காக ஆம்பூர் ரயில் நிலையம் சென்றனர்.
அப்போது, 2-வது நடைமேடையில் இருந்து 3-வது நடைமேடைக்கு தண்டவாளத்தை கடந்த அவர்கள் மீது, வாணியம்பாடியில் இருந்து காட்பாடி நோக்கிச் சென்ற ரயில் மோதியது. அதில் மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Watch: எளிய முறையில் அதிக லாபம் தரும் தர்பூசணி விவசாயம்!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.