Home /News /tamil-nadu /

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கந்துவட்டி கொடுமையால் விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்.. மர தச்சுவேலை செய்யும் இவருக்கு, விமலேஸ்வரி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் இருந்தனர். இந்த நிலையில், மோகன்ராஜ் தச்சுப்பட்டறை வைப்பதற்காக வங்கி மற்றும் கந்துவட்டிக்கு 40 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

    நாளுக்கு நாள் கடன் தொல்லை அதிகரித்ததால் மனஅழுத்தத்தில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தனது வீட்டு அறையில் மூன்று குழந்தைகளையும் கொன்ற மோகன்ராஜ், மற்றொரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மூன்று அறைகளில் முதலில் குழந்தைகளை தூக்கு மாட்டிய மோகன்ராஜ் பின்னர் மனைவியையும் அதைத் தொடர்ந்து தானும் தனித்தனியே மூன்று அறைகளில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளனர். உடலை கைப்பற்றிய வளவனூர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கந்து வட்டிக்கொடுமையால் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடன் தொல்லை தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் குடும்ப பிரச்சினை காரணமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

    மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Villupuram

    அடுத்த செய்தி