ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருமாவளவன் மீது பொய் புகார் கொடுத்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - நாராயணசாமி கருத்து

திருமாவளவன் மீது பொய் புகார் கொடுத்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - நாராயணசாமி கருத்து

புதுவை முதல்வர் நாராயணசாமி.

புதுவை முதல்வர் நாராயணசாமி.

திருமாவளவனின் முழு பேச்சையும் கேட்டுவிட்டு முடிவில்  பொய் புகார் கொடுத்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இன்று மாலை முதல்வர் நாராயணசாமி விடுத்துள்ள வீடியோ பதிவில், புதுச்சேரியில்  உள்ள 15 லட்சம் மக்கள் தொகையில் இதுவரை 3 லட்சம் பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், பண்டிகை காலங்களில் மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். கொரோனாவின் தாக்கம் குறைந்துவிட்டதாக புதுச்சேரி மாநில மக்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது என்றார்.

மேலும் கூறுகையில், இன்று இரண்டாவது முறையாக புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர்கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி என்றும் கொரோனா மருத்துவமனையில் படுக்கைகள் காலியாக உள்ளதால் இனி கொரோனா மருத்துவத்துக்கு வருபவர்கள் அரசு மருத்தவமனையிலேயே சிகிச்சை பெறலாம். இதனால் தனியார் மருத்துவமனையின் சுமை குறையும் என்றும் கூறினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் முழு பேச்சையும் கேட்காமல் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட நாராயணசாமி, மனுநூல் தடை செய்யப்பட வேண்டும் என்றுதான் திருமாவளவன் கூறியுள்ளார். அவர் மீது பழிபோட வேண்டும் என்றுதான் பாஜக புகார் கூறியுள்ளது. தமிழக அரசு அவரின் முழு பேச்சையும் கேட்டுவிட்டு, முடிவில் பொய் புகார் கொடுத்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாராயணசாமி வலியுறுத்தினார்.

மேலும், நவம்பர் 4ம் தேதி முதல் காவல்துறை போலீசார் தேர்வு நடத்தப்படும். காவல்துறை ஆய்வாளர் பதவி  நியமங்களும் விரைவில் நடத்தப்படும்; அதேபோல் மின்சாரப் பொறியாளர்கள் நியமங்களும் நடத்தப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைத்திட வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் தனியார் தொழிற்சாலையுடன் அரசு இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்த உள்ளது. இதனால் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

Published by:Rizwan
First published:

Tags: Narayana samy, Thol. Thirumavalavan