வைகோவின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு - சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு

வைகோவின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வைகோவின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு - சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
  • Share this:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு மூலம் அவதூறு பரப்புவதாகக் கூறி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில், சமூக வலைத்தளத்தில் போலி கணக்குகள் தொடங்கி தனது கட்சிக்கும், தனது தோழமை கட்சிகளுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு கருத்துகள் பரப்புவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Also see:எனவே, இச்செயலில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading