Home /News /tamil-nadu /

தமிழகத்தில் இயங்கும் பிரபல நிறுவனங்களில் தீபாவளி ஆஃபரில் விற்கப்பட்ட போலி டிவிக்கள் - பகீர் தகவல்

தமிழகத்தில் இயங்கும் பிரபல நிறுவனங்களில் தீபாவளி ஆஃபரில் விற்கப்பட்ட போலி டிவிக்கள் - பகீர் தகவல்

கைப்பற்றப்பட்ட போலி டிவி

கைப்பற்றப்பட்ட போலி டிவி

தீபாவளி பண்டிகைக்காக முன்னனி நிறுவனங்களின் டிவி மற்றும் வீட்டுஉபயோகப்பொருட்கள் தள்ளுபடி விலையில் வாங்கிய பொதுமக்கள் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
தமிழகத்தில் இயங்கும் பிரபல நிறுவனங்களில் தீபாவளி ஆஃபர் என்ற பெயரில் போலி டிவிக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது போலீசார் விசாணையில் தெரியவந்துள்ளது.

திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள சிட்டிபிளாசா வணிகவளாகத்தில் செயல்பட்டுவரும் 'திருச்சி எலக்ட்ரானிக்ஸ் ஷாப்' நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி முன்னனி நிறுவனங்களின் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டுஉபயோகப்பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக அறிவித்தனர். இதையடுத்து நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த சவுகத் அலி என்பவர் 32 இன்ச் எல்இடி டிவியினை வாங்கியுள்ளார். இதற்கு உரிய கணிணி ரசீது வழங்கப்படாமலும், பழுதுநீக்கத்திற்கு விற்பனை மையத்திலேயே கொடுக்க உரிமையாளர் நிஜாமுதீன் தெரிவித்துள்ளார்.

டிவியை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு கொண்டு சென்று டிவியை ஆன்செய்து பார்த்ததில் வேலை செய்யவில்லை.
சந்தேகமடைந்த சவுகத் அலி, சர்வீஸ் சென்டரில் சென்று பரிசோதித்ததில் போலி என்று தெரியவந்தது.
இது குறித்து  பாலக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவுசெய்த ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் எலக்ட்ரானிஸ் விற்பனை நிலையத்திற்குச் சென்று சோதனை செய்ததில் அங்கிருந்த அனைத்து எல்இடி டிவிக்களும் போலியானவையென்றும், போலியான பொருட்களையே வாடிக்கையாளர்களுக்கு இதுவரை விற்பனை செய்தது தெரியவந்தது.

கடை உரிமையாளர் நிஜாமுதீன், விற்பனையாளர்களான முகம்மது பைசல், சரவணன் ஆகியோர்மீது 8 பிரிவுகளின்கீழ் வழக்கப்பதிவு செய்து கைதுசெய்தனர்.  மேலும் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த முன்னனி நிறுவனங்களின் பெயரில் உள்ள சுமார் 64 லட்சம் மதிப்பிலான 153 டிவிக்களை பறிமுதல் செய்தனர்.
தீபாவளி பண்டிகைக்காக முன்னனி நிறுவனங்களின் டிவி மற்றும் வீட்டுஉபயோகப்பொருட்கள் தள்ளுபடி விலையில் வாங்கிய பொதுமக்கள் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து *திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி நீயூஸ் 18க்கு அளித்த  பிரத்யேக பேட்டியில்,
திருச்சியில் மேலும் ஒரு இடம்  தமிழ்நாட்டில் மேலும் 3 இடங்களில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி டி.விக்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசார் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.
அந்த இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது என்றார். இதையடுத்து போலி டிவி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் தயாரிக்கும் கும்பல் விரைவில் சிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பிரபல நிறுவனங்களின் டிவிக்களை வாங்கும் போது பார் கோடு, தயாரிப்புக்கான தனி எண் உள்ளிட்டவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும் என்றும் மூத்த டெக்னீசியன்கள் தெரிவித்துள்ளனர்.



நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
Published by:Vijay R
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள்

அடுத்த செய்தி