சிலிண்டரில் எரிவாயு சேமிப்பு என போலி கருவி பொருத்தி பணம் பறிப்பு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சிலிண்டர் - மாதிரிப் படம்

ஏஜென்சி அனுப்பும் ஊழியர்தானா அல்லது மோசடி நபர்களா என்பதை உறுத்தி செய்துகொள்ள வேண்டும்.

  • Share this:
    சிலிண்டரில் எரிவாயு சேமிக்கக் கூடிய கருவி மற்றும் சிலிண்டரின் எடை அழுத்தத்தைக் கண்டறிவதற்கான கருவியை பொருத்தித் தருவதாகக் கூறி, மோசடி நபர்கள் சிலர் போலி கருவிகளை பொருத்தி அதிக பணம் வசூலிக்கும் நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவற்றை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

    இது குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் பொருத்தப்பட்டுள்ள ஆரஞ்சு நிற ரப்பர் குழாயை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து, மாற்ற வேண்டும். அதேபோல, ரெகுலேட்டர் மற்றும் காஸ் அடுப்பு ஆகியவற்றையும் பரிசோதிக்க வேண்டும். பாதுகாப்பு கருதி இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

    இத்தகைய பணிகளை வாடிக்கையாளர்களின் ஏஜென்ட்கள் மேற்கொள்வார்கள். அவர்கள் இந்தப் பணியை மேற்கொள்ள வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் செல்வதற்கு முன்னர், அவர்கள் வரும் விவரத்தை சம்பந்தப்பட்டஏஜென்சிகள் வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே குறுஞ்செய்தி மூலம் தகவல் அளித்து தெரிவித்துவிடும். இவ்வாறு பரிசோதனைக்கு வரும் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 300 மூபாய் கட்டணமாக செலுத்தினால் போதும். கூடுதல் தொகையை அளிக்க வேண்டாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இவ்வாறு வீடுதேடி வரும் ஊழியர், சம்பந்தப்பட்ட ஏஜென்சி அனுப்பும் ஊழியர்தானா அல்லது மோசடி நபர்களா என்பதை, ஏஜென்சிக்கு தெடர்பு கொண்டு வாடிக்கையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    Read More : ஏசி உள்ள வீடுகளில் மட்டும் திருட்டு- ஃபைவ் ஸ்டார் ஹோட்டல், மது, மாது: போலீஸில் சிக்கிய ’உல்லாச’ திருடன்

    இந்நிலையில், சிலிண்டரில் எரிவாயு சேமிக்கக் கூடிய கருவி மற்றும் சிலிண்டரின் எடை அழுத்தத்தைக் கண்டறிவதற்கான கருவியைப் பொருத்தித் தருவதாகக் கூறி, சில மோசடி நபர்கள் போலி கருவிகளைப் பொருத்தி அதிக பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அதை நம்பியும் வாடிக்கையாளர்கள் ஏமாற வேண்டாம்.” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    Published by:Suresh V
    First published: