ஆன்லைனில் மதுபானம்... பயனர்களின் தகவல்களைக் கறந்த போலி டாஸ்மாக் இணையதளம்...!

போலி டாஸ்மாக் தளம்

மது வகைகளுடன் சிப்ஸ், சிக்கன் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் இணையதளத்தில் இடம்பெற்றிருந்தன.

 • News18
 • Last Updated :
 • Share this:
  டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பெயரில் போலியாக இணையதள பக்கம் ஒன்று நேற்று வைரலாக பரவியது.

  ஊரடங்கு காலம் முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாதென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்தால், அந்த விற்பனையை ஆன்லைன் மூலம் மேற்கொண்டு வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

  இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

  இந்த நிலையில், டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் ஒன்று புதிதாக இயங்கிவருகிகிறது. ஆன்லைனில் மதுபானம் டெலிவரி என்று அதில் குறிப்பிட்டுள்ள நிலையில், பயனர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் கேட்கப்படுகின்றன.

  மது வகைகளுடன் சிப்ஸ், சிக்கன் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் இணையதளத்தில் இடம்பெற்றிருந்தன.

  போலி இணையதளம் என்று தெரியாத நிலையில், பலரும் தங்களது முகவரி உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்தனர். நள்ளிரவு முதல் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.
  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sankar
  First published: