காவல்துறை உயர் அதிகாரிகள் பெயரில் போலி சமூகவலைதளப் பக்கங்கள்: கவர்ச்சிகரமான முதலீடுகள் என்ற பெயரில் இணைய மோசடி
சமூக வலைதளவாசிகளிடம் பணமோசடி செய்வதற்காக இணைய மோசடி கும்பல் அவர்களின் பெயரில் போலியாக சமூகவலைதள கணக்கை உருவாக்கி வருகின்றனர்.

ஃபேஸ்புக்
- News18 Tamil
- Last Updated: May 31, 2020, 11:50 AM IST
தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளின் பெயரில் போலியாக சமூக வலைத்தளங்களில் கணக்கு உருவாக்கப்பட்டு அவற்றின் மூலம் ஒரு கும்பல் மோசடிக்கு முயற்சி செய்துள்ளது.
ராணுவ அதிகாரிகள் பெயரைச்சொல்லி ஓ.எல்.எக்ஸ் மோசடி செய்வது, வங்கி மேலாளர் போல பேசி மோசடி செய்வது, மேலும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு நம்பர்களை குறிவைத்து மோசடி போன்றவை நாளுக்கு நாள் இணைய உலகில் பெருகிவரும் மோசடி குற்றங்களாகும். இவ்வகையில் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளின் பெயரில் போலியாக சமூக வலைத்தளங்களில் கணக்கு உருவாக்கப்பட்டு அவற்றின் மூலம் ஒரு கும்பல் மோசடிக்கு முயற்சி செய்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக இருந்து வருபவர் ரவி ஐபிஎஸ். இவரது பெயரில் சில தினங்களுக்கு முன்பாக போலியான முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முகநூல் பக்கத்தில் கவர்ச்சிகரமான முதலீடு என்ற பெயரில் ரூபாய் 40 ஆயிரத்திலிருந்து 4 லட்சம் வரை பணம் ஈட்டலாம் என்று வங்கி கணக்குடன் விளம்பரம் வெளியாகியிருந்தது. இதனைப் பார்த்த ஏடிஜிபி ரவியை சமூக வலைத்தளத்தில் பின்பற்றுபவர்கள் சிலர் அவரிடம் இந்த விவரங்களை கூறியுள்ளனர். பின்னர் சைபர் க்ரைம் போலீசார் மூலமாக சம்பந்தப்பட்ட அந்த முகநூல் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த வங்கி கணக்கை ஆராய்ந்த போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வங்கி கணக்கு என்பதும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இணைய மோசடி கும்பலால் இந்த போலியான முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறை உயரதிகாரி பெயரில் போலி முகநூல் பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் அவரை சமூக வலைதளத்தில் பின்பற்றும் நபர்களிடமிருந்து பணத்தைப் பறிக்க திட்டமிட்ட குறிப்பிட்ட மோசடி கும்பல் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் போலியாக உருவாக்கப்பட்ட முகநூல் பக்கமும், மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்கும் முடக்கப்பட்டது. இதே போல, சமீபத்தில் மதுரை காவல் ஆணையரான டேவிட்சன் தேவாசீர்வாதம் பெயரில் போலி சமூகவலைதள பக்கம் உருவாக்கப்பட்டது. பின்பு அவை கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.ராணுவ அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் சினிமா பிரபலங்களின் பெயரில் இதுபோன்று போலி சமூக வலைதளப் பக்கங்கள் உருவாக்கி அவற்றின் மூலம் அவர்களின் நண்பர்கள் மற்றும் சமூக வலைதள வாசிகளிடம் பணமோசடி செய்வதற்காக இணைய மோசடி கும்பல் அவர்களின் பெயரில் போலியாக சமூகவலைதள கணக்கை உருவாக்கி வருகின்றனர்.
இதுபோன்ற ஒரு விளம்பரத்தை யாரேனும் பார்க்க நேர்ந்தால் உடனடியாக காவல்துறையில் தகவல் கொடுக்க வேண்டுமென ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
Also see...
ஜூன் 15-ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு: மாணவர்களின் வீடு தேடிச் செல்கிறது ஹால் டிக்கெட்
ராணுவ அதிகாரிகள் பெயரைச்சொல்லி ஓ.எல்.எக்ஸ் மோசடி செய்வது, வங்கி மேலாளர் போல பேசி மோசடி செய்வது, மேலும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு நம்பர்களை குறிவைத்து மோசடி போன்றவை நாளுக்கு நாள் இணைய உலகில் பெருகிவரும் மோசடி குற்றங்களாகும். இவ்வகையில் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளின் பெயரில் போலியாக சமூக வலைத்தளங்களில் கணக்கு உருவாக்கப்பட்டு அவற்றின் மூலம் ஒரு கும்பல் மோசடிக்கு முயற்சி செய்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக இருந்து வருபவர் ரவி ஐபிஎஸ். இவரது பெயரில் சில தினங்களுக்கு முன்பாக போலியான முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முகநூல் பக்கத்தில் கவர்ச்சிகரமான முதலீடு என்ற பெயரில் ரூபாய் 40 ஆயிரத்திலிருந்து 4 லட்சம் வரை பணம் ஈட்டலாம் என்று வங்கி கணக்குடன் விளம்பரம் வெளியாகியிருந்தது.