Home /News /tamil-nadu /

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை டார்கெட் செய்து நூதன மோசடி.. போலீஸ் பிடியில் போலி வருவாய் ஆய்வாளர்

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை டார்கெட் செய்து நூதன மோசடி.. போலீஸ் பிடியில் போலி வருவாய் ஆய்வாளர்

சேலத்தில் போலி வருவாய் ஆய்வாளர் கைது

சேலத்தில் போலி வருவாய் ஆய்வாளர் கைது

போலி வருவாய் ஆய்வாளர் மது போதையில் இருசக்கர வாகன விபத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதால் சிக்கிக்கொண்டார்.

போலி அடையாள அட்டை வைத்துக்கொண்டு, வருவாய் ஆய்வாளர் எனக்கூறி, விபத்தில் இறந்தவர்களின் விவரங்களை சேகரித்து, இறந்தவர்கள் குடும்பத்தினரிடம்  பணம் பறித்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மது போதையில் இருசக்கர வாகன விபத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதால் சிக்கிக்கொண்டார்.

சேலம் மாநகரையொட்டியுள்ள கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் கடந்த சில ஆண்டுகளாக விபத்தில் இறந்தவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, காப்பீடு தொகையை பெற்றுத் தருவதாக கூறி, பலரிடம் ஏமாற்றி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகின்றது.

இதனிடையே இவர் மீது சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருவதாக கூறி, அதற்கான போலி அடையாள அட்டை தயார் செய்து மோசடியில் ஈடுபட்டு வந்ததும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல் தனது இரு சக்கர வாகனத்தில் போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டி கொண்டும் வளம் வந்துள்ளார். இதனால் இவர் போலீசாரிடம் பிடிபடாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

ALSO READ | தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் சிலைகள் சிதிலம்... கும்பாபிஷேகம் நடத்திட பக்தர்கள் கோரிக்கை
 இந்த நிலையில் நேற்று பிரபாகரன் மது போதையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கீழே சறுக்கி விழுந்து லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரித்தபோது, வருவாய் துறை அலுவலர் என்ற  போலி அடையாள அட்டை,  போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பார்த்ததில் போலீசாருக்கு  சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் முழுமையாக விசாரிக்கப்பட்டதில்  இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது உறுதி ஆனது.

 

பிரபாகரன் வைத்திருந்த போலி ஐடி


பிரபாகரன் அரசு மருத்துவமனையில் இருப்பது பற்றி தகவல் அறிந்த  சேலம் டவுன் குற்றப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரிடம் விசாரிப்பதற்காக போலீசார் பல முறை சென்ற போதும்,  போலீசாரிடம் எந்த பதிலும் சொல்லாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் லேசான காயம் ஏற்பட்டுள்ள நிலையில் மயக்கத்தில் இருப்பது போல் நடித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.  இதனால்  சேலம் மத்திய சிறையில் உள்ள மருத்துவமனையின் பாதுகாப்பு அறையில் அடைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலி வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Salem

அடுத்த செய்தி