என்னா தில்லு... போலீஸ் ஸ்டேசனுக்கு போன போலி பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது

கைதான சூரிய பிரியா

  • News18
  • Last Updated :
  • Share this:
சீருடையுடன் வலம் வந்த போலி பெண் சப்-இன்ஸ்பெக்டர் கணவருடன் கைதாகியுள்ளார்.

சிதம்பரம் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜதுரை இவரது மனைவி சூரியபிரியா (27) இவர் தன்னை பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறிக்கொண்டு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களுக்குச் சென்று சிபாரிசுகளை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று சிதம்பரத்தில் சீருடையுடன் வலம் வந்த போலி சப்-இன்ஸ்பெக்டர் சூரியபிரியாவை சிதம்பரம் நகர போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் நகர கிராம நிர்வாக அதிகாரி அசன்கபார் என்பவர் இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், தன்னை பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறிக்கொண்டு சூரியபிரியா சான்றிதழ் கேட்டதாக புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் சூரியபிரியா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அவரது கணவர் ராஜதுரை, அவர்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த சக்கரபாணி என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சூரியபிரியா கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு போலீஸ் சீருடையில் சென்று தன்னை பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி வழக்கு விசாரணைகளில் சிபாரிசு கேட்டுள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ பார்க்க: குழந்தைகள் என்னுடையதுதான் ஆனால் அவரின் மனைவி என் தாய்

Published by:Sheik Hanifah
First published: