Home /News /tamil-nadu /

மெரினாவில் காதலர்களிடம் பணம் பறிக்க முயன்ற போலி போலீஸ் கைது!

மெரினாவில் காதலர்களிடம் பணம் பறிக்க முயன்ற போலி போலீஸ் கைது!

கோப்பு படம்

கோப்பு படம்

  • News18
  • Last Updated :
    மெரினா கடற்கரையில் போலீஸ் என்று கூறி காதலர்களிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

    நேற்று இரவு காமராஜர் சாலையில் உள்ள நேதாஜி சிலை பின்புறம் உள்ள கடற்கரை மணற்பரப்பில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தனது தோழியுடன் அமர்ந்திருந்துள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு நபர் தன்னை போலீஸ் என அடையாளப்படுத்திக் கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் தர மறுத்தவரை அந்த நபர் கன்னத்தில் அறைந்துள்ளார்.

    உடனே அவர்கள் கூச்சலிட அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு ஒன்று கூடினர். போலீஸ் என்று கூறிய அந்த நபரை கையும் களவுமாக பிடித்த அப்பகுதி மக்கள் பெயர் என்ன என்று கேட்ட போது தியாகராஜன் என்று கூறியுள்ளார். உடனே அவரைப் பிடித்து வைத்த மக்கள் 100-க்கு போன் செய்துள்ளனர். இதையடுத்து ரோந்து வாகன மெரினா காவல் உதவி ஆய்வாளரிடம் தியாகராஜனை ஒப்படைத்தனர்.

    அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் கும்பகோனத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. கைது செய்த போலீசார் தியாகராஜனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வீடியோ பார்க்க: காதலிக்கு செலவு செய்த ₹3 ஆயிரத்தை கேட்டு போலீசில் புகாரளித்த இளைஞர்

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Marina Beach

    அடுத்த செய்தி