டீ சரியில்லை, உணவு சரியில்லை என பல இடங்களில் வசூல் - டிப்டாப்பாக உடையுடன் மோசடியில் ஈடுபட்ட போலி உணவுப்பாதுகாப்பு அதிகாரி..

Youtube Video

கோவில்பட்டி அருகே வியாபாரிகளிடம் மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரி என கூறி வசூல் வேட்டை நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி அதிகாரி சிக்கியது எப்படி?

 • Share this:
  டிப்டாப்பாக உடை அணிந்து ஒவ்வொரு கடையாக சென்று, டீ சரியில்லை, உணவின் தரம் சரியில்லை என்று கூறி 100 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை வசூலித்த போலி உணவு பாதுகாப்பு அதிகாரி சிக்கியுள்ளார். டிப் டாப் டிப்ஸ் ஆசாமி சிக்கியது எப்படி? தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் பஜாரில், கடந்த 2-ஆம் தேதி மாலை டிப்டாப் ஆசாமி ஒருவர் காரில் வந்துள்ளார். தான் மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி என்றும் திடீர் ஆய்வுக்காக வந்துள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

  எட்டயபுரம் பேருந்து நிலையம், மேலவாசல், நடுவிற்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள டீக்கடைகள், பேக்கரி, முட்டை கடை, மளிகைக் கடைகள், ஹோட்டல், பெட்டிக்கடைகளில் ஆய்வு செய்துள்ளார். கொரோனா ஊரடங்கால் உணவுப் பாதுகாப்பு சான்றிதழ் புதுப்பிக்காத கடைகளில் மன்னித்து விட்டு விடுவதாகவும் தற்போது பணம் கொடுக்கும்படியும் கேட்டு வாங்கியுள்ளார்; இப்படி பல கடைகளில் 100 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை வசூலித்துள்ளார்.

  கண்காணிப்பு கேமரா உள்ள கடைகளில் பெயரளவிற்கு விசாரித்து விட்டு நகர்ந்து சென்றுள்ளார். எட்டயபுரம் மட்டுமின்றி அருகில் உள்ள கிராமங்களில் உள்ள கடைகளிலும் அவர் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார். மேலும் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் கேட்டுள்ளார். ஹோட்டல் ஊழியர்கள், இன்று உரிமையாளர் இல்லை, நாளை அலுவலகத்தில் வந்து உரிமையாளரை பாருங்கள் எனக் கூறி அனுப்பியதால், பெரும் தொகை இழப்பு தவிர்க்கப்பட்டது.

  ஒரு கட்டத்தில் சுதாரித்த வியாபாரிகள் விசாரித்தபோது அவர் போலி நபர் என்பது தெரியவந்தது. வியாபாரிகள் புகாரில் போலி அதிகாரி குறித்து தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பாரதி மாரியப்பன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர். மோசடியில் ஈடுபட்டவர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனேரியை சேர்ந்த 22 வயதான கார்த்திகேயன் என தெரிந்தது. மெடிக்கல் நடத்தி வரும் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மேலும் படிக்க...கொரோனாவால் தனிமைப்படுத்திக்கொண்ட முதியவர்கள்: உறவினர்களே கொள்ளையடித்த 250 சவரன் நகைகள்.. நடந்தது என்ன?  கோவில்பட்டி போல் வேறு எங்கும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? இவருக்கு பின்னால் வேறு யாரும் உள்ளனரா என விசாரித்து வருகின்றனர்.
  Published by:Vaijayanthi S
  First published: