ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தவறான தகவல்களால் குழம்பவேண்டாம்: பள்ளிகள் திறக்கப்படும் தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் - தமிழக அரசு

தவறான தகவல்களால் குழம்பவேண்டாம்: பள்ளிகள் திறக்கப்படும் தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் - தமிழக அரசு

கோப்புப் படம்

கோப்புப் படம்

பள்ளிகள் திறக்கப்படும் தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி உரிய நேரத்தில் உரிய முறையில் அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பொருளாதாரக் காரணங்களுக்காக தற்போது பெரும்பாலான தளர்வுகள் வழங்கப்பட்டாலும், பள்ளிகளும் கல்லூரிகளும் திறப்பது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை.

Also read: வனப்பகுதியில் மரங்களை வெட்டுபவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5000 - நீலகிரியில் இயற்கை ஆர்வலரின் புது முயற்சி..

இந்த நிலையில், பள்ளிகள் திறக்கும் தேதியைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ள தமிழக அரசு, பள்ளிகள் திறக்கும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

First published:

Tags: School Reopen