தபால் கணக்கு தொடங்கினால் மத்திய அரசு 15 லட்சம் ரூபாய் தருகிறதா?

"கூட்டம் முண்டியடிப்பதால் வீண் வதந்திகளை நம்பாதீர்கள் என்று தபால் நிலைய அதிகாரிகளே அறிவிப்பு பலகையில் எழுதி வைத்துள்ளனர்."

news18
Updated: August 1, 2019, 11:58 AM IST
தபால் கணக்கு தொடங்கினால் மத்திய அரசு 15 லட்சம் ரூபாய் தருகிறதா?
தபால் நிலையத்தின் முன் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை (Picture : TNM)
news18
Updated: August 1, 2019, 11:58 AM IST
தபால் அலுவலகத்தில் கணக்கு தொடங்கினால் மத்திய அரசு 15 லட்சம் ரூபாய் தருவதாக வதந்தி பரவிய நிலையில், மூணாறு தபால் நிலையத்தில் கடந்த 2 நாட்களில் 1050 புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழக - கேரள எல்லையில் உள்ள மூணாறு பகுதியில் அதிகளவில் தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. இந்த நிலையில், தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கினால், மத்திய அரசு 15 லட்சம் ரூபாய் தருவதாக கூறி இங்கு வேலை செய்யும் ஊழியர்கள் இடையே வதந்தி பரவியுள்ளது. சில இடங்களில் 3 லட்சம் ரூபாய் மத்திய அரசு தருவதாக செய்தி பரவியுள்ளது.

இதனை நம்பிய ஊழியர்கள், கடந்த 3 நாட்களாக மூணாறு தபால் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். ஆதார் அட்டை ஜெராக்ஸ் மட்டுமே போதும் என்பதால், ரூ.100 கட்டி அவர்கள் கணக்குகளை தொடங்கி வருகின்றனர். 15 லட்சம் ரூபாய் வரும் என்ற வதந்தியால் கடந்த 2 நாட்களில் மட்டும் 1050 புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.


மத்திய அரசு அப்படி பணம் ஏதும் தராது என்று பலர் அங்கு வந்து கூறினாலும், அவர்கள் கலைந்து செல்வதாக இல்லை. ஒருவேளை வதந்தி உண்மையாகிவிட்டால் என்று நினைத்த அவர்கள் கணக்கு தொடங்கியே தீர்வது என்ற முடிவுடன் கால் கடுக்க வரிசையில் காத்திருக்கின்றனர்.

கூட்டம் முண்டியடிப்பதால் வீண் வதந்திகளை நம்பாதீர்கள் என்று தபால் நிலைய அதிகாரிகளே அறிவிப்பு பலகையில் எழுதி வைத்துள்ளனர். எனினும், கூட்டம் குறைந்தபாடில்லை.

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...