தேனி அருகே மயானத்தில் கிடந்தது மம்மி-யா ? பீதியில் பொதுமக்கள்.. போலீசார் விசாரணை

தேனி அருகே மயானத்தில் கிடந்தது மம்மி-யா ? பீதியில் பொதுமக்கள்.. போலீசார் விசாரணை
மாயனத்தல் கிடந்த பொம்மை
  • Share this:
தேனி அருகே உள்ள ஒரு சுடுகாட்டில் மம்மி போன்ற உருவத்தில் ஒரு பொம்மை கிடந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

எகிப்து நாட்டில் இறந்தவர்களின் சடலத்தை துணியால் சுற்றி ஒரு பெட்டியில் வைத்து அதன் மீது சில கலவைகளை ஊற்றி புதைப்பது வழக்கம். இவ்வாறு புதைப்பதால் இறந்தவரின் உடல் பல ஆண்டுகாலம் வரை அழுகாமல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனை மம்மி என்று அழைக்கின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள திருமலாபுரத்தில் 500-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விவசாயமே பிரதான தொழிலாக இருக்கும் இந்த கிராமத்திற்கு பாத்தியப்பட்ட சுடுகாட்டு பகுதியில் தலையில் இரத்தக்கரையுடன் உடல் முழுவதும் துணியால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்த சடலத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.


அதனடிப்படையில் அங்கு வந்த கானாவிலக்கு போலீசார் பரிசோதித்த போது மனித வடிவில் தென்னை நார் கழிவுகளால் ஆன ஒரு பொம்மையை துணியால் சுற்றி வைத்துள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த பொம்மை பார்ப்பதற்கு அச்சு அசல் மம்மி போன்றே இருந்தது.

போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மாந்திரீகவாதிகள் செய்வினை, பில்லி சூனியம் செய்வதற்காக மனித வடிவிலான பொம்மையை துணியால் சுற்றி சுடுகாட்டு பகுதியில் பூஜை செய்து போட்டிருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

மேலும் அந்த பொம்மையை சுடுகாட்டு பகுதியில் பெட்ரோல் ஊற்றி போலீஸார் எரித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மம்மி போன்ற பொம்மை சுடுகாட்டில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் இருந்தது அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
First published: February 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்