சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து மளிகைக் கடைக்காரர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு கொள்ளை
சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து மளிகைக் கடை உரிமையாளர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், குடும்பத்தினரைக் கட்டிப் போட்டு துப்பாக்கி முனையில், 20 சவரன் நகைகள், 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
- News18 Tamil
- Last Updated: January 9, 2021, 10:31 AM IST
சிபிஐ அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு வந்த 4 பேர், மளிகைக் கடைக்காரர் குடும்பத்தினரைத் தனித்தனியாகக் கட்டிப் போட்டு நகை, பணத்தைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.
தஞ்சை கீழவாசல் ஆட்டு மந்தை தெருவைச் சேர்ந்தவர் மலையபெருமாள். தனது வீட்டின் எதிரில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் அவரது வீட்டின் அருகில் 4 பேர் சுற்றி சுற்றி வந்து நோட்டமிட்டுள்ளனர். காலை 8 மணியளவில் வீட்டில் புகுந்த அவர்கள், சிபிஐ அதிகாரிகள் என்று கூறி விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு செங்கி்ப்பட்டியில் மலையப்பெருமாளின் கார் விபத்துக்குள்ளாகியதில் ஒரு குழந்தை இறந்ததாகக் கூறியுள்ளனர். அந்தக் குழந்தையின் தந்தை தங்களிடம் புகார் அளித்திருப்பதாகவும் ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் வழக்கில் இருந்து விடுவித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். பின்னர் மலையபெருமாள் அவரது மனைவி, மகன் மற்றும் உறவினர் என நான்கு பேரையும் வீட்டின் மாடிக்கு தனித்தனியாக அழைத்துச் சென்று கட்டிப் போட்டுள்ளனர்.
ஒரு கோடி தரும்படி துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர்; ஆனால் மலையபெருமாளிடம் பணம் இல்லாததால் பிற்பகல் 2 மணி வரை பேரம் பேசியுள்ளனர். இதற்கிடையே, தனக்கு நெஞ்சுவலிப்பதாக மலையபெருமாள் கதறவே அவரை மட்டும் அவிழ்த்து விட்டுள்ளனர். வெளியே வந்த மலையபெருமாள் தனது காரில் ஏறி ஒளிந்து கொண்டுள்ளார்.
மேலும் படிக்க...முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்துத் தகர்ப்பதா? - சீமான் கண்டனம்அந்த நேரம் பார்த்து வீட்டில் பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து மலையபெருமாள் அளித்த புகாரின் பேரில், தஞ்சை நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து மளிகைக் கடை உரிமையாளர் வீட்டில் 20 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
தஞ்சை கீழவாசல் ஆட்டு மந்தை தெருவைச் சேர்ந்தவர் மலையபெருமாள். தனது வீட்டின் எதிரில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் அவரது வீட்டின் அருகில் 4 பேர் சுற்றி சுற்றி வந்து நோட்டமிட்டுள்ளனர். காலை 8 மணியளவில் வீட்டில் புகுந்த அவர்கள், சிபிஐ அதிகாரிகள் என்று கூறி விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு செங்கி்ப்பட்டியில் மலையப்பெருமாளின் கார் விபத்துக்குள்ளாகியதில் ஒரு குழந்தை இறந்ததாகக் கூறியுள்ளனர். அந்தக் குழந்தையின் தந்தை தங்களிடம் புகார் அளித்திருப்பதாகவும் ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் வழக்கில் இருந்து விடுவித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.