Exclusive | விமான நிலைய வேலை மோசடி விவகாரம் : நீயூஸ்18 செய்தியின் அடிப்படையில் விமான நிலைய இயக்குநர் புகார்
Exclusive | விமான நிலைய வேலை மோசடி விவகாரம் : நீயூஸ்18 செய்தியின் அடிப்படையில் விமான நிலைய இயக்குநர் புகார்
மாதிரிப்படம்
நியூஸ்18 பிரத்யேக செய்தியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி விமான நிலைய இயக்குநர் தருமராஜன், திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடம் புகார் அளித்துள்ளார்.
கொரோனா பொது முடக்கத்தால் விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்கள் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களில் வேலை வாய்ப்பு என்று கூறி கொரோனா பொது முடக்க காலம் என்பதால் தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு எதுவும் இல்லாமல் ஆன்லைனில் சான்றிதழ்களை மட்டும் சரிபார்த்து விட்டு வேலை தருவதாக வேலை தேடும் இளைஞர்களை குறி வைத்து மோசடி நடைபெறுவது தெரியவந்துள்ளது.
கொரோனா பொதுமுடக்கத்தைச் சொல்லி எந்தவித தேர்வும் இன்றி விமான நிலையங்களில் வேலை என்று SMS, ₹ 50 ஆயிரம் வரை ஊதியம், 8ம் வகுப்பு - பி.இ முடித்தவர் வரை வேலை வாய்ப்பு என்கிற கவர்ச்சிகரமான விளம்பரம் அல்லது தகவல் வாட்ஸ் அப் குழுக்களில், நேரடியாக செல்லிற்கு SMS ஆக பகிரப்படுகிறது. இதுகுறித்து நீயூஸ்18தொலைக்காட்சியில் பிரத்யேக செய்தி வெளியானது.
வாட்ஸ் அப் எண் மற்றும் போலி அழைப்பானை
இந்நிலையில், நியூஸ் 18 பிரத்யேக செய்தியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி விமான நிலைய இயக்குநர் தருமராஜன், திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மாநகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.