சிவகங்கையில் போலி ஆதார் கார்டு மூலம் மகளிர் குழுக்களை குறிவைத்து லோன் மோசடிகள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிரங்கால், காளையார்கோவில் பகுதிகளில் ஜெராக்ஸ் கடைகளில் இருந்து பெரும் தகவல்கள் மூலம் சில ஏஜெண்டுகள் போலி ஆதார் அட்டைகளை தயார் செய்ததாக கூறப்படுகிறது. சில மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் ஒருமுறை கடன் பெற்றால் அந்த நபருக்கு மீண்டும் கடன் வழங்குவதில்லை என கூறப்படுகிறது.
இதனால் 3000 ரூபாய் வரை பெற்றுக் கொண்டு சில ஏஜெண்ட்கள் போலியாக ஆதார் அட்டை தயார் செய்து தருகின்றனர். அதன் மூலமாக மகளிர் சுய உதவி குழுக்கள் என்ற பெயரில் லோன் வாங்கியுள்ளது தெரியவந்து. இது தொடர்பாக சிவகங்கையில் சேர்ந்த மகளிர் குழுவை சேர்ந்த சிலர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also see...
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.