குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 சாத்தியமில்லை என்று வெளியான தகவலின் உண்மை தன்மை என்ன?

ரேஷன் கடை

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் சாத்தியமில்லை என்று தமிழக அரசு அறிவித்ததாக இணையத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Share this:
    ரேஷன் கடைகளில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் சாத்தியமில்லை என்று வெளியான தகவல் தற்போது இணையத்தில் பேச்சுப் பொருளாக உள்ளது. இந்த தகவலின் உண்மை தன்மை பற்றி தற்போது பார்க்கலாம்.

    திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் படிபடிப்பயாக நிறைவேற்றப்படுகிறது. இந்த தேர்தல் அறிக்கையில் மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் திட்டம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படுவது.

    திமுக ஆட்சிக்கு வந்த உடன் ரூ.4000 நிவாரண நிதி மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணிகள் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தது. அடுத்தப்படியாக மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்முறைப்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே பலர் புதிய ரேஷன் கார்டு மற்றும் குடும்ப தலைவராக பெண்ணை மாற்றம் செய்து ஏகப்படட்ட கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறது.

    இதனிடையே குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் சாத்தியமில்லை என்று தமிழக அரசு அறிவித்ததாக இணையத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பலர் திமுக அரசை விமர்சித்து ட்விட்டரில் பல விமர்சனங்களை பதிவு செய்தனர். இதையடுத்து இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இது முற்றிலும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.



    தமிழக அரசு இது தொடர்பாக எந்த தகவலும், அறிக்கையும் வெளியிடப்படவில்லை. சமீபத்தில் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தமிழகத்தில் குடும்ப அட்டைகள் வேண்டி விண்ணப்பித்த 15 நாட்களில் குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டப்படி, இல்லத்தரசிகளுக்கு  ரேஷன் கடையில் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிதிநிலையை கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்திருந்தார்.

    இதனால் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் சாத்தியமில்லை என்று வெளியான தகவல் போலியானது. விரைவில் இந்த திட்டம் செயலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: