Fact Check : குழந்தை சுஜித் மீட்பு பணிக்கு ₹11 கோடி செலவு? உண்மை நிலவரம் என்ன?

Fact Check : குழந்தை சுஜித் மீட்பு பணிக்கு ₹11 கோடி செலவு? உண்மை நிலவரம் என்ன?
சிறுவன் சுஜித்
  • Share this:
ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுஜித்தை மீட்க 11 கோடி ரூபாய் தமிழக அரசு செலவு செய்துள்ளது என்றும் அங்கு தங்கியிருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் சாப்பாடு உள்ளிட்ட செலவு குறித்த விவரங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபள்ளியில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். கடந்த 25ம் தேதி மாலை 5.30 மணியளவில் விழுந்த சுஜித்தை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தேசிய - மாநில பேரிடம் குழுக்கள் கூட்டாக இணைந்து குழந்தையை மீட்க போராடினார்கள். இந்த போராட்டங்கள் அனைத்தும் பயனில்லாமல் குழந்தை சுஜித்தின் உடல் 80 மணி நேரத்திற்கு மேல் மீட்க ப்பட்டது.


இந்த மீட்பு பணிகளின் போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் நிகழ்விடத்தில் இருந்தனர்.

இந்நிலையில் குழந்தை சுஜித்தின் உடலை மீட்க தமிழக அரசு 11 கோடி ரூபாய் செலவு செய்தது என சமூகவலை தளத்தில் ஒரு செய்தி வேகமாக பரவியது. அதில் ரிக் இயந்திரம் வாடகை, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் சாப்பாடு செலவு, தமிழக அரசின் மருத்துவ குழுவிற்கான வாடகை, 108 ஆம்புலன்ஸ் வாடகை, குழந்தை சுஜித்திற்காக வாங்கப்பட்ட சவப்பெட்டி, தோண்டிய குழி என உள்ளிட்ட அனைத்திற்கும் எவ்வளவு செலவு என்றும் மொத்தமாக 11 கோடி ரூபாய் என்றும் இருந்தது.

இது குறித்து பேரிடர்  மேலாண்மை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “அதற்கு அது வெறும் வதந்தி. தவறான வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். நாட்டையே உலுக்கும் துயர சம்பவம் நடைபெற்றிருக்கும் இந்த நேரத்தில் இதுப் போன்ற வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்“ என்றுக் கேட்டு கொண்டார்.


இதேபோல, திருச்சி மாவட்ட ஆட்சியரும், மீட்பு பணிகள் செலவு தொடர்பான தகவல்களை மறுத்து, உண்மையான செலவு கணக்கு அறிக்கையை அளித்துள்ளார்.

அதில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க இயக்கப்பட்ட வாகனங்களுக்கு செலவுத் தொகை கொடுக்கப்படவில்லை. வாகன உரிமையாளர்கள் வேண்டாம் என்று மறுத்து விட்டனர்.

இயந்திரங்களுக்கு டீசல் செலவு மட்டுமே ஆனது. மீட்புப் பணிக்காக 5 ஆயிரம் லிட்டர் டீசல், ₹ 5 லட்சம் மட்டுமே செலவாகியது. ஆனால், அதிக செலவானதாக வாட்ஸ்அப்பில் பரப்பப்படும் பொய் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அரசுக்கு எதிரான பொய் செய்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குழந்தை சுஜித் மீட்பு பணிக்கு 11 கோடி ரூபாய் செலவு செய்ததாக உலா வரும் தகவல் முற்றிலும் வதந்தி. இதற்கு முன்பே குழந்தை சுஜித் போன்ற ஒரு சிறுவரின் வீடியோவை டிக்-டாக்கில் வெளியிட்டு வந்தனர். தேவையற்ற வீண் வதந்திகளை நம்புவதை விட அதன் உண்மை நிலையை அறியாமல் மற்றவர்களுக்கு பகிராமல் இருப்பதே மிகவும் சரியான செயலாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நியூஸ் 18 தமிழ்நாடு ஆப்-ஐ கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

Also Watch

First published: October 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்