ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஃபேஸ்புக்கில் காதல் வலை.. வாட்ஸ் அப்பில் செக்ஸ் பேச்சு.. 50 வயது தொழிலதிபரிடம் பணம் கறந்த பெண்..

ஃபேஸ்புக்கில் காதல் வலை.. வாட்ஸ் அப்பில் செக்ஸ் பேச்சு.. 50 வயது தொழிலதிபரிடம் பணம் கறந்த பெண்..

ஸ்மார்ட்போன் : குழந்தைகளிடம் உங்கள் ஸ்மார்ட்போனை எக்காரணம் கொண்டும் தராதீர்கள். பல பெற்றோர்கள் குழந்தைகளை சாப்பிட வைக்கவும், அவர்களை சமாதானப்படுத்தவும் அவர்களின் கையில் மொபைலை தந்து விடுகின்றனர். இதனால் உங்கள் குழந்தையை நீங்களே டிஜிட்டல் குழிக்குள் தள்ளுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிறு வயதில் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவதால் குழந்தைகளின் குணத்தில் மோசமான பாதிப்பு உண்டாகும்.

ஸ்மார்ட்போன் : குழந்தைகளிடம் உங்கள் ஸ்மார்ட்போனை எக்காரணம் கொண்டும் தராதீர்கள். பல பெற்றோர்கள் குழந்தைகளை சாப்பிட வைக்கவும், அவர்களை சமாதானப்படுத்தவும் அவர்களின் கையில் மொபைலை தந்து விடுகின்றனர். இதனால் உங்கள் குழந்தையை நீங்களே டிஜிட்டல் குழிக்குள் தள்ளுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிறு வயதில் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவதால் குழந்தைகளின் குணத்தில் மோசமான பாதிப்பு உண்டாகும்.

அந்தரங்க பேச்சின் மூலம் பார்த்திபனை தனது வலையில் சிக்கவைத்துள்ளார். மணிக்கணக்கில் பேச ஆரம்பித்த ஜனனி மெல்ல சரவண பார்த்திபனின் பர்ஸை பதம் பார்க்க ஆரம்பித்தார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

ரியல் எஸ்டேட் அதிபரிடம் செல்போனில் ஆபாசமாக பேசி பணம் பறித்த பெண்ணையும் அவரது கணவரையும் திருவாரூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் கண்டியூரைச் சேர்ந்தவர் சரவணபார்த்திபன். இவருக்கு வயது 51. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். பேஸ்புக்கில் ஆக்டிவாக இருக்கும் சரவண பார்த்திபனுக்கு தூத்துக்குடியை சேர்ந்த திருமணமான ஜனனி என்ற 25 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்ட சில நாளிலே இருவருக்கும் காதல் பற்றிக்கொண்டது. உண்மையில் நம்மிடம் பேசுவது பெண் தானா என அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை ஜனனி ஒரு பேக் ஐடியா இருக்குமோ என சந்தேகம் வந்துள்ளது.

Also Read: மொட்டை கடிதத்தால் மாட்டிக்கொண்ட போலி பெண் வழக்கறிஞர் - ஷாக்கான பார் கவுன்சில்

உன்னிடம் பேச வேண்டும் எனக் கூறி ஜனனியின் செல்போன் நம்பரை கேட்டுள்ளார். ஜனனியும் செல்போன் எண்ணைக் கொடுத்துள்ளார். ஜனனியின் குரலை கேட்டதும் அவருக்கு ஆசை அதிகரித்தது. செல்போனில் பேச்சு.. வாட்ஸ் அப்பில் சாட்டிங் என காதலை வளர்த்துள்ளார். 51 வயதான சரவண பார்த்திபனின் சபலத்தை அறிந்துக்கொண்ட ஜனனி அந்தரங்க பேச்சின் மூலம் பார்த்திபனை தனது வலையில் சிக்கவைத்துள்ளார். மணிக்கணக்கில் பேச ஆரம்பித்த ஜனனி மெல்ல சரவண பார்த்திபனின் பர்ஸை பதம் பார்க்க ஆரம்பித்தார். ஜனனியின் பேச்சுக்கு அடிமையான சரவண பார்த்திபன் சில்லறைகளை சிதறவிட்டுள்ளார். கூகுள் பே, போன் பே ஆப்களின் மூலம் ஜனனியின் வங்கிக்கணக்கில் லட்சங்கள் குவிந்ததுள்ளது.

இது ஜனனியின் கணவரான தூத்துக்குடியைச் சேர்ந்த பார்த்திபனுக்கு தெரியவர மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். ஆத்திரத்தில் இருந்த கணவனை சமாதானம் செய்து தனது திட்டத்தை எடுத்துக்கூறியுள்ளார். சும்மா வரும் லட்சங்களை விடவேண்டுமா என மனைவியின் சொல்லை கேட்டு அமைதியாகிவிட்டார். வாய்ஸ் சேட்டிங், வாட்ஸ் அப் மெசேஜ் ஆகியவை ரியல் எஸ்டேட் அதிபருக்கு போர் அடிக்க ஜனனியை கழற்றிவிட்டுள்ளார். பணம் வரத்து நின்றதால் பதறிய ஜனனி மாற்றி யோசிக்க ஆரம்பித்துள்ளார்.

Also Read: ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக வழக்கறிஞரை சிறையில் தள்ளிய பெண்.. திடீர் திருப்பமாக உறவினர்கள் சொன்ன அதிர்ச்சி சம்பவம்

செல்போன் எண்ணை மாற்றி ஜனனியின் தோழி பேசுவது போல் சரவண பார்த்திபனை தொடர்புக்கொண்டுள்ளார். குரலை மாற்றி சரவண பார்த்திபனுடன் சேட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளார். ஆசை வார்த்தைகளை மீண்டும் பணம் பறிக்கும் முயற்சியில் இறங்கினார். இந்நிலையில்தான் மொத்தமாக ஒரு தொகையை வாங்கி செட்டிலாகிவிடலாம் என ஜனனி ரியல் எஸ்டேட் அதிபருக்கு போன் செய்துள்ளார். நீங்க என் தோழியிடம் பேசுறது வீட்டுக்கு தெரிஞ்சு பிரச்னையாகிடுச்சு.. ஒரு தொகையை கொடுத்து அவள செட்டில் பண்ணி விடுங்க என நல்லவர் போல் பேசியுள்ளார். ஆனால் சரவணன் அதற்கு சம்மதிக்கவில்லை. உடனே பெண் இன்ஸ்பெக்டர் போல் பேசி மிரட்டியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போலீஸ் என்றதும் சரவண பார்த்திபன் கொஞ்சம் பதறிவிட்டார். சரி என்று ஒரு தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டார். ஸ்டேஷன்ல இருந்து எஸ்.ஐ அனுப்புறேன் அவருகிட்ட காசு கொடுத்து விடுங்கன்னு ஜனனி போலீஸ் போல் மிரட்டியுள்ளார். சரவணனும் சம்மதிக்க தனது கணவரை போலீஸ் போல் அனுப்பியுள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருக்கு போலீஸ் யார் போலி யார்ன்னு தெரியாதா என்ன. தூத்துக்குடியில் இருந்து வந்த பார்த்திபன் மீது சந்தேகம் வர தனது நண்பனின் ஹோட்டலில் தங்கவைத்துள்ளார்.

இதனையடுத்து நண்பர்களை வைத்து பார்த்திபனுக்கு ஒரு கவனிப்பு கொடுத்துள்ளார். இதில் உண்மையை கூறிவிட்டார். ரியல் எஸ்டேட் அதிபரான சரவணன் ஜனனியை தொடர்புக்கொண்டு நான் கொடுத்த பணத்தை மொத்தமா செட்டில் பண்ணிட்டு கும்பகோணம் வந்து உன் புருஷன கூட்டிக்கிட்டு போன்னு போனில் மிரட்டியுள்ளார். கொஞ்சம் கூட பயப்படாத ஜனனி கணவரை கடத்திக்கிட்டு போய் பணம் கேட்டு மிரட்டுறாங்கன்னு தூத்துக்குடி ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். அங்கிருந்து கும்பகோணம் வந்தவர் உள்ளூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்து தனது நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

ஜனனியின் புகாரின் பேரில் லாட்ஜில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பார்த்திபனை போலீஸார் மீட்டனர். ரியல் எஸ்டேட் அதிபரையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்தனர். ஸ்டேஷனில் நடத்திய விசாரணையில் சரவணனிடம் இருந்து ஜனனி பல லட்சங்களை பறித்தது தெரியவந்தது. இரு தரப்பினரும் மாறி மாறி கொடுத்த புகாரில் மூன்று பேரும் திருச்சி சிறையில் கம்பி எண்ணி வருகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Facebook, Sexual call, WhatsApp, WhatsApp Audio