பேஸ்புக் காதல்... மாணவியை அதிர வைத்த மிரட்டல்... கைதான இளைஞர்...!

பேஸ்புக் காதல்... மாணவியை அதிர வைத்த மிரட்டல்... கைதான இளைஞர்...!
  • News18
  • Last Updated: February 10, 2020, 5:30 PM IST
  • Share this:
சென்னையில் முகம் தெரியாத நபரிடம், முகநூல் மூலம் பழகிய 20 வயது இளம்பெண் சிக்கலில் மாட்டியுள்ளார். இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரில் மோசடி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த ஒருவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவருக்கு 20 வயதில் ஒரு இளம் பெண் உள்ளார்.

பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டில் இருக்கும் அந்த பெண் பொழுதுபோகாமல் முகநூலில் பொழுதை கழித்து வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் கொடுங்கையூரைச் சேர்ந்த 22 வயதான நூரல் ஆசிம் என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார்.


ஆரம்பத்தில் சாதாரணமாக அந்த பெண்ணிடம் பேசி வந்த நூரல் ஆசிம், முகநூல் சாட் மூலம் பேசிப்பேசி தனது காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். நூரல் ஆசிமின் சொக்கவைக்கும் பேச்சில் மயங்கி அவரை காதலிக்கத் தொடங்கினார் அந்த 22 வயது இளம் பெண்.

அதன் பிறகு இரவு பகலாக முகநூலில் தங்கள் காதலை இருவரும் வளர்த்து வந்தனர். இளம் பெண் காதலில் விழுந்ததை உறுதி செய்த ஆசிம் தனது வேலையைக் காட்டத் தொடங்கினார்.

முகநூல் சாட்டில் ஆபாசமாக பேசத் தொடங்கி தனது பாலியல் வலையில் அந்த இளம்பெண்ணை சிக்கவைக்க முயற்சி செய்துள்ளார்.இதனால் அதிர்ந்துபோன அந்த பெண், சுதாரித்து ஆசிம் உடனான காதலையும், முகநூல் நட்பையும் முறித்தார்.

இதை அடுத்து தனது குரூர புத்தியை ஆசிம் காட்டத் தொடங்கியுள்ளார். முகநூல் மூலம் அந்த பெண் அனுப்பிய புகைப்படங்களை மார்ஃபிங் செய்து வெளியிடுவேன் என்றும், இருவருக்கும் இடையிலான ரகசிய சாட்டிங்கை வெளியிடுவேன் என்றும் மிரட்டத் தொடங்கியுள்ளார்.

தனக்கு வீட்டில் திருமணம் செய்து வைக்க உள்ளதாகவும், அதனால் தன்னை விட்டுவிடுமாறும் அந்த பெண் கெஞ்சியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆசிம், புகைப்படத்தை வெளியிடாமல் இருக்க பணம் தருமாறு கேட்டு அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.

விவகாரம் விபரீதமாவதை அறிந்த அந்த பெண், உடனடியாக இந்த பிரச்னையை தனது பெற்றோரிடம் கொண்டு சென்றுள்ளார். மகள் கூறியதை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து மகளை திட்டிய அவர்கள், ஆசிம் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வழக்குப் பதிவு செய்த போலீசார், நூரல் ஆசிமை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், முகநூலில் பெண்களை நட்பாக்கி, தனது பாலியல் வலையில் வீழ்த்துவதும், பின்னர் அவர்களிடம் இருந்து பணம் பறிப்பதையும் தொழிலாக வைத்திருந்தது தெரிய வந்தது.

இதை அடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading