ஃபேஸ்புக் மூலம் காதல்! திருநங்கையை மணந்த இளைஞர்

ஃபேஸ்புக் மூலம் காதல்! திருநங்கையை மணந்த இளைஞர்
திருநங்கையை மணந்த வாலிபர்
  • News18
  • Last Updated: August 8, 2019, 1:04 PM IST
  • Share this:
விழுப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முகநூல் மூலம் பழகிய திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்த லட்சுமணன் மும்பையில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தை சேர்ந்த சேகர்-அமுதா தம்பதிக்குப் பிறந்த திருநங்கை அமிர்தாவுடன் முகநூல் மூலம் நட்பாகி பழகியுள்ளார். பின்னர் அமிர்தாவுடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது.

இருவருக்கும் இடையே உள்ள காதலை அவர்கள்  தங்களது குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் லட்சுமணன் - அமிர்தா திருமணம் விமர்சையாக நடைபெற்றது.


Also see... இளம்பெண் கொலை - 10 ஆண்டுக்குப்பின் திடீர் திருப்பம்அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading