ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொரோனா பரவல் - தலைமைச் செயலகத்தில் இன்று முதல் மாஸ்க் கட்டாயம்

கொரோனா பரவல் - தலைமைச் செயலகத்தில் இன்று முதல் மாஸ்க் கட்டாயம்

மாஸ்க்

மாஸ்க்

Mask : தமிழகத்தில் அனைத்து அலுவலர்களுக்கும் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழ் நாட்டில் 124 நாட்களுக்கு பிறகு நேற்று ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மருத்துவத் துறை அறிக்கையில், 24 மணி நேரத்தில் 1,063 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 497 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளதாகவும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 190 பேருக்கும், கோவையில் 50 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 174ஆக அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் வேலூர், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்:

இந்நிலையில், பொதுத்துறை அரசு துணைச் செயலாளர் எஸ்.அனு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகத்தில் புதிய வகை கோவிட் 19 தொற்று கண்டறியப்பட்டுள்ளதாலும், சில மாவட்டங்களில் இதன் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாலும், நோய்த் தொற்றின் தாக்கல்திலிருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்பதாலும், அனைத்து அலுவலர்களும் 24-6-2022 (இன்று) முதல் கட்டாயமாக முக்ககவசம் (Face Mask) அணிந்து அலுவலகத்திற்கு வருமாறும் சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் (Respiratory hygiene and use of hand sanitizers in the Office premises) இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

Must Read : 12-எம்.எல்.ஏக்களை பதவிநீக்கம் செய்யுங்கள்.. சிவசேனா கோரிக்கை - உச்சக்கட்ட பரபரப்பில் மகாராஷ்டிரா அரசியல்

தலைமைச் செயலகத்தில் முகக்கவசம் கட்டாயம்:

இந்நிலையில் கொரோனா அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் இன்று முதல் கட்டாயம் முகக் கவசம் அணிந்து கொண்டுதான் அலுவலகத்திற்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Corona, Face mask, Mask