எஸ்றா சற்குணம் பாதிரியாராக மட்டுமே செயல்பட வேண்டும்- எல்.முருகன்

எஸ்றா சற்குணம் பாதிரியாராக மட்டுமே செயல்பட வேண்டும்- எல்.முருகன்

எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர்

எஸ்றா சற்குணத்தை கைது செய்ய வலியுறுத்தி பாஜக போராடும் என்றார் எல்.முருகன்

  • Share this:
மதுரை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எஸ்றா சற்குணம் பாதிரியாராக மட்டுமே செயல்பட வேண்டும் கூறினார்.

செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த எல்.முருகன், வேளாண் சீர்திருத்த சட்டங்களை எளிமையாக புரியும் வகையில் எடுத்து சொல்லும் விதமாக ஆங்காங்கே கூட்டம் நடைபெற்று வருகிறது என்றும், வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி விவசாயிகளுக்கான சன்மானம் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதாகவும். இத்திட்டம் விவசாயிகளுக்கு நன்மை பயக்க கூடியது என்பதால் திமுகவின் போராட்டம் வெற்றி பெறவில்லை என்று கூறிய எல்.முருகன், திமுக விவசாயிகளுக்கு எப்போதும் நன்மை செய்யாது என்றார்.

மேலும், எஸ்றா சற்குணம் பாதிரியாராக மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், அரசியல் செய்வதை கண்டிப்பதாகவும் கூறிய எல்.முருகன் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவரை கைது செய்ய வலியுறுத்தி பாஜக போராடும் என்றும் கூறினார்.
Published by:Suresh V
First published: