ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வசதியான முதியவர் டார்கெட்.. ஆபாச படங்களை எடுத்து மிரட்டி பணம் பறித்த பெண்!

வசதியான முதியவர் டார்கெட்.. ஆபாச படங்களை எடுத்து மிரட்டி பணம் பறித்த பெண்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜியை கைது செய்த விசாரித்ததில், பணத்திற்காக திட்டமிட்டு சிக்கவைத்து ஆண் நண்பருடன் சேர்ந்து பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kerala, India

  கேரளாவில் வசதியான முதியவருடன் பழகி ஆபாச புகைப்படங்களை எடுத்து மிரட்டி 50 லட்சம் ரூபாய் பணம் பறிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

  கேரள மாநிலம் திரிச்சூரில், திப்பிலசேரி பகுதியை சார்ந்தவர் 35 வயதான ராஜி. இவர் குந்நங்குளம் என்ற பகுதியில் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். ராஜிக்கு அவரது ஆண் நண்பர் மூலமாக சாவக்காடு பகுதியைச் சேந்த 71 வயது முதியவர் ஒருவரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து வசதியுடன் வாழ்ந்து வந்த முதியவருடன் ராஜி நெருக்கமாக பழகத் தொடங்கினார்.

  Read More : அரசு பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - நடத்துனர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

  நெருக்கம் அதிகரிக்க பியூட்டி பார்லர் அறையில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது ராஜி தனது செல்போனில் புகைப்படங்களை எடுத்துள்ளார். சில நாட்கள் கழித்து ராஜி முதியவரிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். முதியவர் பணம் கொடுக்க முடியாது என மறுக்க, தனது செல்போனில் இருக்கும் புகைப்படங்களை அனுப்பி அதை உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டத் தொடங்கியுள்ளார்.

  இப்படியாக மிரட்டி 3 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் 50 லட்சம் ரூபாய் கொடுக்கவில்லை என்றால் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் என மிரட்ட ஆரம்பித்துள்ளார். இதனால் பொறுமை இழந்த முதியவர் குந்நங்குளம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.

  வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜியை கைது செய்த விசாரித்ததில், பணத்திற்காக திட்டமிட்டு சிக்கவைத்து ஆண் நண்பருடன் சேர்ந்து பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது.இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த ராஜியின் ஆண் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Kerala