வீடுகளுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

மின் கட்டணம்

வீடுகள் உள்ளிட்ட தாழ்வழுத்த நுகர்வோரின் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான அவகாசம், ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வெளியிட்டுள்ள அறிக்கையில் தாழ்வழுத்த மின் நுகர்வோர்களின் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் மே 10 முதல் மே 31ம் தேதி வரை இருக்குமாயின் அதற்கான அவகாசம் ஜுன் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

  மேலும் மே 10 முதல் 31 வரையிலான காலத்தில் மின் கணக்கீடு செய்ய வேண்டிய தாழ்வழுத்த மின் நுகர்வோர், 2019 மே மாதத்தில் கணக்கீடு செய்யப்பட்ட தொகையை செலுத்தலாம் என்றும் 2019 மே மாதக் கட்டணம் கூடுதலாக இருப்பதாக கருதுவோர் 2021 மே மாதத்தின் முந்தைய மாத கணக்கீட்டுப்படி அதாவது மார்ச் 2021-ன் கணக்கீட்டுப்படி உத்தேச கட்டணத்தை செலுத்தவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

  இவ்வாறு செலுத்த வேண்டிய உத்தேச மின் கட்டணம் பின்வரும் மாத கணக்கீட்டு மின் கட்டணத்தினல் முறைபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஏப்ரல் மாத மின் கட்டணம் செலுத்தாத உயர் மின்னழுத்த மின் இணைப்புகளுக்கு தாமதக்கட்டணத்துடன் மின் துண்டிப்பின்றி காலநீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோவருக்கான கூடுதல் வைப்புத் தொகை, கேட்புத் தொகை செலுத்த ஜூன் 15 வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.
  Published by:Vijay R
  First published: