டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷையனின் பதவிக்காலத்தை வரும் டிசம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 10ஆவது துணைவேந்தராக கடந்த 2018 டிசம்பர் 31ல் பொறுப்பேற்ற இவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தெரிவுக்குழு நவம்பர் மாத இறுதியில் அமைக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பூர்ணலிங்கம் ஒருங்கிணைப்பாளராகவும், மைசூரின் ஜெ.எஸ்.எஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைவேந்தர் டாக்டர் பி.சுரேஷ் , போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை பிரிவு தலைவர் தணிகாச்சலம் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
தவறுதலாக விஷ காளான் சாப்பிட்ட 13 பேர் உயிரிழப்பு...
துணைவேந்தர் பதவிக்கு மொத்தம் 37 பேர் விண்ணப்பித்து நேர்காணல் வரை நடந்து முடிந்து. அதில் தற்போதைய மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுரி முதல்வர் சாந்தி மலர் மற்றும் கரூர் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் ரேவதி ஆகிய 3 பேரை தேர்வு செய்து ஆளுநரின் முடிவுக்காக தெரிவுக்குழு அனுப்பியது. ஜனவரி முதல் வாரத்தில் தெரிவுக்குழு மூன்று பெயர்களை இறுதி செய்து அனுப்பியது.
இந்நிலையில், மூன்று மாதங்கள் கழித்து ஏப்ரல் 6ம் தேதி சுதா சேஷையனின் பதவிக்காலத்தை டிசம்பர் வரை நீட்டித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.