பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல் நீட்டிப்பு

அற்புதம் அம்மாள் மற்றும் பேரறிவாளன்

மூன்றாவது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் காலம் பரோரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

  அவருக்கு சிறுநீராக தொற்று உள்ளிட்ட, உடல் பாதிப்புகள் இருப்பதால், சிகிச்சைக்காக ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

  இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, ஒரு மாதம் பரோல் வழங்கியது. இதையடுத்து, மே 28ஆம் தேதி பேரறிவாளன், தனது இல்லத்திற்குச் சென்றார். அங்கிருந்து, சிறுநீரக தொற்று உள்ளிட்ட பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

  Must Read : ஒன்றுபட்டு நின்றால் நம்மை யாரும் வீழ்த்த முடியாது - மேகதாது விவகாரத்தில் துரைமுருகன் உறுதி

  இந்நிலையில், பேரறிவாளனுக்கு இரண்டு முறை தலா ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பேரறிவாளனின் பரோல் காலம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனால், பேரறிவாளனுக்கு மூன்றாவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: