தளர்வுகளுடனான ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

தளர்வுகளுடனான ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

கொரோனா வைரஸ்

பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடனான ஊரடங்கை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடனான ஊரடங்கை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கொரோனாவை தடுக்க வீடு வீடாக ஆய்வு செய்யும் பணி தொடரும்.

  நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை. கொரோனா பரவலை பொறுத்து மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதித்துக்கொள்ளலாம்.

  சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

  கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

  Must Read : ஜல்லிக்கட்டின் நிஜ நாயகர்கள் இளைஞர்கள்தான்... ஓபிஎஸ், மோடி இல்லை - மு.க.ஸ்டாலின்

   

  தமிழகத்தில் நேற்று 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் மட்டும் 874 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: