தமிழகத்தில் திருவிழா, அரசியல் கூட்டங்களுக்கு அக்டோபர் 31 வரை தடை

மாதிரிப் படம்

சமூகம் சார்ந்த மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தற்போது உள்ள தடை அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் மதம்- அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31 வரை தடை நீட்டிக்கப்படுவதாக- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டும், அண்டை மாநிலமான கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா மட்டுமின்றி நிஃபா வைரஸ் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதி அதிகப்படியான பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளான திருவிழாக்கள், அரசியல். சமூகம் சார்ந்த மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தற்போது உள்ள தடை அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  மேலும் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திய நபர்களில் சுமார் 12 சதவீதம் நபர்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 45 சதவிகித நபர்களுக்கு ஒரு தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும் தினந்தோறும் சுமார் மூன்று லட்சம் தடுப்பூசிகள் என்ற அளவில் இருந்ததை தற்போது சுமார் 5 லட்சம் என்று அதிகரித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

  தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளில் வகுப்பு நடைபெற்று வருவதால் பள்ளி, கல்லூரி வளாகங்களில் அனைத்து நோய்பரவல் தடுப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு உள்ளாட்சி பொறுப்பாளர்கள், மருத்துவத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: