சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து... ஒருவர் உயிரிழப்பு 2 பேர் காயம்

கோப்பு படம்

சிவகாசி அருகே எம் துரைச்சாமிபுரம் பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்டார். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 • Share this:
  சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்ட எம் துரைச்சாமிபுரம் பகுதியில் ராஜீ என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பேன்சி ரக பட்டாசு தயாரிக்கப்படும். இந்த ஆலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது. 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் . இந்த நிலையில் நேற்று பணி முடிந்து தொழிலாளர்கள் சென்ற நிலையில் அறையில் வைத்திருந்த மீதி மருந்தில் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப வீரியம் கூடியுள்ளது.

  இந்நிலையில் இன்று காலை பட்டாசு ஆலையில் உள்ள  கதவுகளை திறக்க தொழிலாளர்கள் 3 பேர் சென்றுள்ளனர். அப்போது அங்கு வைத்திருந்த மீதி மருந்தின் காரணமாக திடீரென ஏற்பட்ட வெடி  விபத்தில் 5 அறைகள் தரைமட்டம் ஆனது. கட்டிட இடர்பாடுகளில் சிக்கி  தொழிலாளர் தர்மராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

  முருகன், கந்தசாமி ஆகிய இருவர் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மேலும் தீ பரவமால் இருக்க தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து மாரனேரி  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் படிக்க... உண்மைக்கும், பித்தலாட்டத்திற்கும் நடக்கக்கூடிய கரூர் தொகுதி தேர்தலில் உண்மை ஜெயிக்க வேண்டும்’ : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

  விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் நடைபெறும் 7 வது பட்டாசு ஆலை வெடி விபத்து இதுவாகும் 7 விபத்துக்களில்  37 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 25 பேர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: M.செந்தில்குமார்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: