Home /News /tamil-nadu /

பாஜகவின் நீட் நிலைபாட்டை கருத்தில்கொண்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக விளக்கம்

பாஜகவின் நீட் நிலைபாட்டை கருத்தில்கொண்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக விளக்கம்

பாஜக அலுவலத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

பாஜக அலுவலத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் அதிகாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு, அதிகாலை ஒன்றரை மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். கட்டடத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவலறிந்ததும் அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசிய தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் உள்ளது என்றும், எனவே போலீசார் தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் எனவும் பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியிருந்தார். இதேபோல பாஜக பிரமுகர்கள் பலரும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “நமக்கு கோவிலாக இருக்கும் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு கண்டனம், இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு தமிழக காவல்துறை அடக்க வேண்டும். இது போன்ற செயலால் பாஜக தொண்டர்கள் தளர்வு கொள்ளமாட்டார்கள் வெற்றியை நோக்கி நாம் பயணிப்போம்” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



    இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். தடயவியல் துறையினரும் தடயங்களை சேகரித்தனர். இதனிடையே, தகவலறிந்து பாஜக அலுவலகத்திற்கு வந்த அக்கட்சி தொண்டர்கள், பெட்ரோல் குண்டுகளை வீசியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில் வினோத் என்கிற கருக்கா வினோத் என்பவரை கைது செய்த போலீசார். அவரிடம் விசாரணை நடத்தினர்.

    Must Read : இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 9 மீனவர்கள் தமிழகம் வந்தனர்

    அதனைத் தொடர்ந்து  வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மத ரீதியாகவோ, அரசியல் சம்பந்தமாகவோ இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும், பாஜகவின் நீட் நிலைபாட்டை கருத்தில் கொண்டு அந்த நபர் பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்திருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: BJP, Neet Exam

    அடுத்த செய்தி