2021-22ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி வரை தமிழ்நாடு கூட்டுறவு மாநில மேலாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மூலம் ரூ.78.69 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியானது, தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு நீண்ட காலக் கடன்களை வழங்கி வருகிறது என்றும், நபார்டு வங்கியிலிருந்து மறுநிதியுதவி பெற அரசு உத்தரவாதம் ஏதும் இல்லாத காரணத்தினால் 2004ல் இருந்து நீண்ட கால கடன் வழங்க இயலவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : பென்னிகுயிக் இல்லம் ஆதாரம் இருக்கிறதா? பேரவையில் முதலமைச்சர் ஆவேசம்
மேலும், நபார்டு வங்கியிடமிருந்து மறுநிதியிதவி பெற்று நீண்டகாலக் கடன்களை மறுபடியும் வழங்க பிப்ரவரி 2021ல் ரூ.100 கோடிக்கு அரசு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கியின் பங்கு மூலதனம் மார்ச் 31 2021ன் படி ரூ.51.31 கோடியாகவும், வைப்புகள் ரூ.290.18 கோடியாகவும் உள்ளது என்றும், 2020-21ம் ஆண்டில் இவ்வங்கி மூலம் ரூ.1111.69 கோடி நகைக்கடன் வழங்கியுள்ளது எனவும், 2021-22ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி வரை ரூ.78.69 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.