எல்லா பூச்சிகளும் விவசாயிகளுக்கு எதிரி அல்ல... நன்மை பயக்கும் பூச்சிகள் குறித்து வல்லூநர்கள் கருத்து!

எல்லா பூச்சிகளும் விவசாயிகளுக்கு எதிரி அல்ல... நன்மை பயக்கும் பூச்சிகள் குறித்து வல்லூநர்கள் கருத்து!
பூச்சிகளின் வகைகள்
  • News18
  • Last Updated: February 14, 2020, 3:44 PM IST
  • Share this:
எல்லா பூச்சிகளும் விவசாயிகளுக்கு எதிரி அல்ல என்றும் நன்மை பயக்கும் பூச்சிகளும் உள்ளது என்றும் வல்லூநர்கள் தெரிவித்துள்ளனர்.

குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் வெட்டுக் கிளிகளின் படையெடுப்பால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். நம் கிராமங்களில் இயல்பாக நம் அனைவாராலும் பார்க்க முடிகிற பச்சை நிறம் கொண்ட இந்த சாதாரண  வெட்டுக்கிளிகள்தான் பெரும் கூடங்களாய் படையடுத்து வட குஜராத் ராஜஸ்தான் பகுதிகளில் விவசாய நிலங்களை மொத்தமாக அழித்து சென்று விடுகின்றன.

இதனால் அந்த மாநில விவசாயிகள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். வட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் என்றால் தமிழகத்தில் ராணுவ பூச்சி,  தென்னையை தாக்கும் வெள்ளை ஈ, ஆணைக்கொம்பன் ஈ  போன்றவைகளால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.


இந்நிலையில் இந்திய விவசாய ஆய்வு நிறுவனம் மற்றும் லயோலா கல்லூரி சார்பில் " பூச்சியல் பன்மைத்துவமும் பாதுகாப்பு முறைகளும்" என்ற 2 நாட்கள் கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள், மற்றும் 17 பூச்சியில் வல்லுநர்கள் பங்கேற்றனர்.

இந்த கருத்தரங்கை  வேளாண்துறை முதன்மை செயலர் ககன் தீப் சிங் தொடங்கிவைத்தார்அப்போது பேசிய அவர் பூச்சிகள் விவசாயிகளுக்கு எதிரி அல்ல என்றும், தீமை பயக்கும் பூச்சிகளை நன்மை பயக்கும் பூச்சிகளை கொண்டு கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், பூச்சிகளை அழிக்க பூச்சி கொல்லி மருந்துகளை பயண்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார். இதே போல்  குஜராத் ராஸ்தான் மாநிலங்களில் அங்கு நிலவும் சீதோஷன நிலை காரணமாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பு உள்ளதாகவும் தமிழகத்தில் அந்த பாதிப்பு இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.Also see...
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்