கொரோனா பெண்களைவிட ஆண்களை அதிகம் தாக்குவது ஏன்? நிபுணர்கள் விளக்கம்

புள்ளி விபரங்களை மட்டும் வைத்துக்கொண்டு பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம் நோய் பாதிப்பை ஏற்படுத்துவதாக முடிவுக்கு வரமுடியாது.

கொரோனா பெண்களைவிட ஆண்களை அதிகம் தாக்குவது ஏன்? நிபுணர்கள் விளக்கம்
கோப்பு படம்
  • Share this:
கொரோனா நோய் பெண்களைவிட ஆண்களை ஏன் அதிகம் தாக்குகிறது என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

கொரோனா நோய்க்கு உலக அளவிலும் இந்தியாவிலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்கள் என்பது தரவுகள் மூலம் தெரிகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 6,389 ஆண்களும் 3,282 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது 66.54% ஆண்களே தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். பெண் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன், X குரோமோசோம் உள்ளிட்டவை காரணமாக பெண்களுக்கு இயல்பாகவே கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக யூகிக்கப்பட்டது. ஆனால் இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


இதுகுறித்து விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறும்போது,  இவ்வாறு வாதிடுவது சுவாரசியமாக இருக்கலாம் ஆனால் நிரூபணம் எதுவும் இல்லை. பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு புகை பழக்கம் ஒரு காரணமாக இருக்கலாம். புகைப்பழக்கம் நுரையீரலை பாதிக்கும்’ என்று தெரிவித்தார்.

கொரோனா நோய்க்கு பாலின வேறுபாடு எல்லாம் தெரியாது. பொதுவாக ஆண்கள் தான் அதிகம் பயணம் செய்கிறார்கள் அதிகம் பேருடன் தொடர்பு கொள்கிறார்கள். பரவல் அதிகரிக்கும் பொழுது வீட்டில் இருப்பவர்களுக்கும் நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் பெண்களிடையே பாதிப்பு அதிகம் இருப்பதற்கு இதுவே காரணம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். சென்னையில் இப்போது வரை பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 61.02% ஆண்கள், 38.94% பெண்கள் ஆவர் என்று ஓய்வு பெற்ற பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி இவ்வாறு தெரிவிக்கிறார்.

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி கூறுகையில், புள்ளி விபரங்களை மட்டும் வைத்துக்கொண்டு பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம் நோய் பாதிப்பை ஏற்படுத்துவதாக முடிவுக்கு வரமுடியாது. ஆண்களுக்கு அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கலாம். இது குறித்து இதுவரை எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. என்றார்.


Also see...
First published: May 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading